Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்: திருமாவளவன்

SIR work in TN should be stopped: தமிழகத்தில் சிறப்பு வாக்காளர்கள் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், பீகாரில் வாக்கு திருட்டு நடந்ததை போன்று இங்கும் நடக்கும் என்பதால், அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை எதிர்க்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்: திருமாவளவன்
திருமாவளவன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Oct 2025 22:57 PM IST

சென்னை, அக்டோபர் 26: தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி சிறப்பு வாக்காளர்கள் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பது அதிர்ச்சியளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில், தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் நடக்க உள்ள பீகாரில் இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டிலும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுமா என கேள்வி எழுந்தது.

Also read: ‘எதிரியா இருக்க தகுதி வேணும்’ அஜித் வசனத்தைச் சொல்லி விஜய்யை விமர்சித்த சீமான்!

இந்நிலையில், டெல்லியில் நாளை மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்கள் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) குறித்து அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையில், தேர்தல் ஆணையத்தின் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று கூறியிருந்தார். அதன்படி, தமிழகத்தில் விரைவில் இப்பணிகள் தொடங்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also read: விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது: ராஜேந்திர பாலாஜி

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி சிறப்பு வாக்காளர்கள் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.மேலும், பீகாரில் வாக்கு திருட்டு நடந்ததை போன்று தமிழகத்திலும் நடக்கும் என்று எச்சரித்த அவர், இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்று திரள வேண்டும். பல்கலைகக்கழக சிறப்பு மசோதாவை திரும்ப பெறவேண்டும் என விசிக சார்பிலும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மறுசீராய்வு செய்யப்படும் என அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.