Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சேலம், கோவை, திருப்பூர் வழியாக நின்று செல்லும் புதிய வந்தே பாரத் ரயில்.. முழு விவரம்..

Vande Bharat Train: தற்போது தமிழ்நாடு வழியாக பெங்களூருவில் இருந்து கொச்சி (எர்ணாகுளம்) நோக்கி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. பெங்களூருவில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

சேலம், கோவை, திருப்பூர் வழியாக நின்று செல்லும் புதிய வந்தே பாரத் ரயில்.. முழு விவரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Nov 2025 09:12 AM IST

பெங்களூரு – நவம்பர் 2, 2025: பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 76 வந்தே பாரத் ரயில்கள் நடைமுறையில் மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான மக்கள் வந்தே பாரத் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னையிலிருந்து கோவை, சென்னையிலிருந்து நெல்லை, சென்னையிலிருந்து நாகர்கோவில், சென்னையிலிருந்து விஜயவாடா போன்ற பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

மேலும் படிக்க: தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்.. படிப்படியாக உயரும் வெப்பநிலை..

புதிய வந்தே பாரத் ரயில் சேவை:

குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் பல மாவட்டங்களில் இந்த ரயில் சேவைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என மக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், தற்போது தமிழ்நாடு வழியாக பெங்களூருவில் இருந்து கொச்சி (எர்ணாகுளம்) நோக்கி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.

மேலும் படிக்க: இரண்டு பச்சிளம் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்!

பெங்களூரு – எர்ணாகுளம் வந்தே பாரத் ரயில் சேவை விவரம்:

பெங்களூருவில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமுனையில், எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.00 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.

பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், காலை 8.13 மணிக்கு சேலம், 9.00 மணிக்கு ஈரோடு, 9.45 மணிக்கு திருப்பூர், 10.33 மணிக்கு கோவை சென்றடையும். அங்கிருந்து 10.35 மணிக்கு புறப்பட்டு, 11.28 மணிக்கு பாலக்காடு, 12.28 மணிக்கு திருச்சூர், பின்னர் இறுதியாக எர்ணாகுளம் சென்றடையும்.

மறுமுனையில், எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரயில் பிற்பகல் 5.20 மணிக்கு கோவை, 6.03 மணிக்கு திருப்பூர், 6.45 மணிக்கு ஈரோடு, 7.18 மணிக்கு சேலம் ஆகிய இடங்களை சென்றடையும்.

சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட வழித்தடங்கள் வழியாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த ரயில் சேவையை எதிர்நோக்கும் ஆர்வம் தமிழகத்திலும் கேரளாவிலும் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.