AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்.. படிப்படியாக உயரும் வெப்பநிலை..

Tamil Nadu Weather Update: கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வந்த நிலையில், தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக, வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்.. படிப்படியாக உயரும் வெப்பநிலை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Nov 2025 06:40 AM IST

சென்னை, நவம்பர் 2, 2025: தெற்கு மியான்மார் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது இன்று, அதாவது நவம்பர் 2, 2025 அன்று, கிழக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் போதும் மேலும் வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, கிழக்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, நவம்பர் 2, 2025 அன்று தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மாவட்டந்தோறும் தொண்டர் அணி… கூட்ட நெரிசலை தவிர்க்க தவெக மாஸ்டர் பிளான்

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு:

மேலும், வரவிருக்கும் நவம்பர் 7, 2025 வரை தமிழகத்தில் லேசான அல்லது மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என கூறப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வந்த நிலையில், தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக, வெப்பநிலையின் தாக்கமும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: செங்கோட்டையனை நீக்கும் அளவுக்கு இபிஎஸ்-க்கு தகுதி இல்லை: டிடிவி தினகரன் பாய்ச்சல்!

படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை:

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 37.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் 36 டிகிரி செல்சியஸ், வேலூரில் 35.1 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 35 டிகிரி செல்சியஸ், கரூரில் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரோட்டில் 36.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34.1 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 33.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் பதிவாகியுள்ள வெப்பநிலை, இயல்பை விட 5.9 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us