மாவட்டந்தோறும் தொண்டர் அணி… கூட்ட நெரிசலை தவிர்க்க தவெக மாஸ்டர் பிளான்
TVK Vijay : கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இது போன்ற சம்பவம் இனி நடக்காதவாறு தமிழக வெற்றிக் கழகம் மாவட்டந்தோறும் தொண்டர் அணி ஒன்றை உருவாக்கியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 2 : தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய்யின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தவெக கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு பிறகு கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை மாமல்லபுரம் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து கட்சிப் பணிகளில் விஜய் (Vijay) விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார். விரைவில் அவர் பரபரப்புரையைத் தொடங்குவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்ட நெரிசல் சம்பவம் போன்று இனி நடக்கக் கூடாது என முக்கிய முடிவெடுத்திருக்கிறார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தவெகவில் தொண்டர் அணி
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தொண்டர் அணி உருவாகவுள்ளது. கரூர் சம்பவம் போல் இனி நடக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என இருவர் வீதம் மொத்தம் 468 நிர்வாகிகள் தொண்டர் அணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நவம்பர் 2, 2025 அன்று பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.




இதையும் படிக்க : கரூர் துயரம்: தீவிரமெடுக்கும் விசாரணை.. சம்பவ இடத்தில் சிபிஐ!!
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு விஜய் வாழ்த்து
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்! மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்! தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள் என தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : கூட்டணி பேச்சுவார்த்தை.. சஸ்பென்ஸ் வைத்த அன்புமணி ராமதாஸ்!!
விஜய்யின் எக்ஸ் பதிவு
தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்!
மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை…
— TVK Vijay (@TVKVijayHQ) November 1, 2025