Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சமூக ஒற்றுமைக்காக தன்னை அர்ப்பணித்தவர் – பனையூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு விஜய் மரியாதை

Thevar Jayanthi : முத்துராமலிங்க தேவரின் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அவரது புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர் என விஜய் புகழாரம் தெரிவித்தார்.

சமூக ஒற்றுமைக்காக தன்னை அர்ப்பணித்தவர் – பனையூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு விஜய் மரியாதை
பசும்பொன் தேவர் படத்துக்கு விஜய் மரியாதை
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Oct 2025 15:04 PM IST

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை நிகழ்ச்சி அக்டோபர்  30, 2025 அன்று நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) பனையூரில் உள்ள தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்துக்கு விஜய் அஞ்சலி

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்துக்கு அஞ்சலி செலுத்திய விஜய் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : ரூ.3கோடி பட்ஜெட்.. முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

விஜய்யின் எக்ஸ் பதிவு

 

இதையும் படிக்க : நவ. 5 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்.. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..

ரூ.3 கோடி செலவில் திருமண மண்டபம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், “அறம் வளர்த்த பாண்டிய மன்னர்கள் ஒருமித்த இளவல் மாதிரி கம்பீரமாக காட்சியளித்த தேவர் திருமகன்,’ என்று அண்ணாதுரை பாராட்டியுள்ளார்.  பசும்பொன் திருமகனாரின் நினைவு போற்றக்கூடிய இந்த மணிமண்டபத்தை, 1974ல் கருணாநிதி கட்டிக் கொடுத்தார். முத்துராமலிங்கத் தேவரின் பெயரில் ரூ.3 கோடி செலவில் திருமண மண்டபம் ஒன்று கட்டப்படும் என்று அறிவித்தார்.