Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்…குவிந்து வரும் பக்தர்கள்…பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்!

Palani Dhandayuthapani Temple: பழனி தண்டாயுதபானி கோயிலில் தைப்பூசத்தையொட்டி, இன்று மாலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். கோயிலில் 3 ஆயிரம் போலீசார், 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்…குவிந்து வரும் பக்தர்கள்…பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்!
பழனி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 31 Jan 2026 10:52 AM IST

தைப்பூசத்தையொட்டி, ஆறுபடை வீடுகளில் 3- ஆம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த ஜனவரி 26- ஆம் தேதி ( திங்கள் கிழமை) தைப்பூச திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்காரங்கள், சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இன்று சனிக்கிழமை மாலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இதில், பல பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வருகை தருகின்றனர். இதனால், பழனியில் திரும்பும் திசையெல்லாம் பச்சை வண்ண ஆடைகளில் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தந்துள்ளனர்.

3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கோயிலில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. இதனால், பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கட் பாக்கெட், சிற்றுண்டி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் பிரசன்னா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க: வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா…தர்ம சாலை- கருங்குழி சன்னிதியில் கொடியேற்றம்…பக்தர்கள் பரவசம்!

பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வெகு நேரம் காத்திருப்பதால் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பக்தர்கள் நீராடுவதற்காக இடும்பன் குளம், சண்முக நதி ஆகியவற்றில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. பக்தர்களுக்காக பேருந்து வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவில் பகுதியில் சுமார் 3 ஆயிரம் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

12 மீட்பு வாகனங்கள்-600 கண்காணிப்பு கேமராக்கள்

இதில், பக்தர்களின் பொருள்கள் திருடு போவதை தடுக்க 22 சிறப்பு குற்ற குழுக்கள், 600 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நீராடும் ஆற்று பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பக்தர்கள் ஆழமான பகுதிகளுக்கு செல்லாத வகையில், ரப்பர் படகில் தீயணைப்பு படையினர் ரோந்து சென்று வருகின்றனர். மேலும், கோவில் பகுதியில் சுமார் 12 இடங்களில் மீட்பு பணிக்கான வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில், 170- நிற்கும் மேற்பட்ட படையினர் கண்காணித்து வருவதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா…இன்று ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி!