Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தைப்பூசம் 2026.. வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி?.. 3 நாள் விரத முறை.. முழு விவரம்

Thaipusam 2026: தைப்பூசம் அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, பூஜையறையைச் சுத்தம் செய்து, கஸ்தூரி மஞ்சளால் அருங்கோணம் போட்டு, நல்ல மண்ணகலில் சுத்தமான நெய் ஊற்றி, இரண்டு கல்கண்டு வைத்து, வாழைத்தண்டு திரி அல்லது தாமரை திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

தைப்பூசம் 2026.. வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி?.. 3 நாள் விரத முறை.. முழு விவரம்
தைப்பூசம் 2026
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Jan 2026 14:02 PM IST

தைப்பூசம் என்பது தமிழர்களின் முக்கியமான ஆன்மிகத் திருநாள்களில் ஒன்றாகும். இது தை மாதம் பூசம் நட்சத்திரம் வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முழுவதும் முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித நாள் என பக்தர்கள் நம்புகின்றனர். தைப்பூசம் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம், அன்னை பார்வதி தேவி முருகப்பெருமானுக்கு வேல் அளித்த நாள் என்பதுதான். அந்த வேல், தீமையை அழிக்கும் சக்தியாகவும், அறியாமையை நீக்கும் ஞானத்தின் வடிவமாகவும் கருதப்படுகிறது. அதனால் தைப்பூசம் அன்று வேல் வழிபாடு மிகுந்த சிறப்புடன் நடைபெறுகிறது. இந்த நாளில் முருக பக்தர்கள் விரதம் இருந்து, உடலும் மனமும் தூய்மையுடன் வழிபாடு செய்கிறார்கள்.

மேலும் படிக்க: தைப்பூசத்தில் அப்படி என்ன சிறப்பு?.. எதனால் கொண்டாடுகிறோம்?..

வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி?

இதற்காக வீட்டிலேயே எப்படி விரதம் இருந்து வழிபடுவது என்பதை பார்க்கலாம். தைப்பூசத்தையொட்டி, மூன்று நாட்கள் கடும் தவ விரதமாக இருப்பார்கள். பூஜையறையில் கஸ்தூரி மஞ்சள் என்று சொல்லப்படும் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மஞ்சளை எடுத்துக் கொள்வார்கள். அந்த மஞ்சளை தண்ணீரில் குழைத்து, பூஜையறைக்கு முன்னால் ஒரு மணை போட்டு அதில் பூசி அமைப்பார்கள். அதன்மேல் அருங்கோணம், அதாவது முருகருடைய அருங்கோணத்தை வரைவார்கள். அறிவியல் ரீதியாகப் பார்த்தால், மேலிருந்து இழுக்கும் சக்தி ஆனாகுவம் என்றும், கீழிருந்து இழுக்கும் சக்தி பெண்ணாகுவம் என்றும் சொல்லப்படுகிறது.

சரவண பவ எழுதி வைத்து வழிபடலாம்:

எப்படிப்பட்ட கணவன்–மனைவி பிரச்சினைகள் இருந்தாலும், குடும்பப் பிரச்சினைகள் இருந்தாலும், அன்பன் இணைய சரவணபவ, சரவணபவ என்று எழுதி வைத்து வழிபடுவார்கள். இதுவே முகப்பு பூஜை ஆகும். அந்த கஸ்தூரி மஞ்சளின் மேல் அரிசி மாவைப் போட்டு, அதற்குக் கீழே ஒரு வாழை இலை வைத்து பச்சரிசி போடுவார்கள். அதன் மேல் ஒரு அகல் விளக்கோ அல்லது குத்து விளக்கோ வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றுவார்கள். அந்த அருங்கோணத்தின் நடுவில் வேலையும் வைப்பார்கள்.

கந்த சஷ்டி கவசம் பாடலாம்:

“கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா” என்று மனப்பூர்வமாக கந்த சஷ்டி கவசம் அல்லது முருகனுடைய பாடல்களைப் பாடி, அச்சதையிட்டு வழிபாடு செய்வார்கள். அதன் பிறகு மூன்று நாட்கள் வெறும் டிபன் மட்டும் எடுத்துக் கொள்வார்கள். சிலர் பால், சிலர் கஞ்சி, சிலர் பழங்கள் மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.

என்னால் நாற்பத்தெட்டு நாள் விரதம் இருக்க முடியவில்லை, வேலைக்குச் செல்கிறேன், மறந்துவிடுவேன், அல்லது பெண்கள் என்றால் முடியவில்லை என்று நினைப்பவர்களுக்கு இதுதான் எளிய வழி. இருபத்தொரு நாள் முடியவில்லையா? மூன்று நாட்கள் கூட முடியவில்லையா? அப்படியானால் தைப்பூசம் அன்று ஒரே நாள் பூஜையாக இதை செய்யலாம்.

தைப்பூசம் அன்று ஒரு நாள் பூஜை:

தைப்பூசம் அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, பூஜையறையைச் சுத்தம் செய்து, கஸ்தூரி மஞ்சளால் அருங்கோணம் போட்டு, நல்ல மண்ணகலில் சுத்தமான நெய் ஊற்றி, இரண்டு கல்கண்டு வைத்து, வாழைத்தண்டு திரி அல்லது தாமரை திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு மஞ்சள் கயிறு ஒன்றை எடுத்து, கந்த சஷ்டி கவசமோ, கந்த அனுபூதியோ, கந்த குரு கவசமோ அல்லது உங்களுக்கு விருப்பமான உபாசனை மந்திரமோ 108 முறை சொல்லி, அந்த மஞ்சள் கயிற்றை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: தைப்பூசம் 2026: முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? எப்போது விரதம் தொடங்க வேண்டும்? முழு விவரம்!!

அன்று முழுவதும் அது முருகனுக்குக் காப்பு கட்டியதற்குச் சமம். அந்த தினத்திலிருந்து உங்கள் வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலைபெறும். புத்திரத்தடை, திருமணத்தடை, வம்சாவளித் தடைகள் போன்றவை நீங்கி, நல்ல ஆரோக்கியமும் வளர்ச்சியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.