Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தைப்பூசத்தில் அப்படி என்ன சிறப்பு?.. எதனால் கொண்டாடுகிறோம்?..

Thaipusam 2026: முருகப் பெருமானின் கையில் காணப்படும் இரண்டு வேல்கள் – ஞான வேல், வஜ்ர வேல் – இரண்டும் வேறுபட்ட தத்துவங்களை உணர்த்துகின்றன. வஜ்ர வேல் என்பது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றின் இணைப்பு; தீமையை அழிக்கும் சக்தி. அதே வேல் முருகனின் கையில் வந்து ஞான வேலாக மாறி, பக்தர்களுக்கு அருளையும் அறிவையும் அளிக்கிறது.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 21 Jan 2026 14:13 PM IST
தைப்பூசம் என்பது முருகப் பெருமானின் வேல் தத்துவத்தை உணர்ந்து கொண்டாடப்படும் ஆன்மிகத் திருநாள். “வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறைவில்லை, கந்தனுண்டு கவலை இல்லை” என்ற சொல்லே தைப்பூசத்தின் முழு பொருளையும் விளக்குகிறது. இந்த நாள் முருகன் வழிபாட்டின் உச்சமாகக் கருதப்படுகிறது.

1 / 5
தைப்பூசம் கொண்டாடப்படுவதற்கான அடிப்படை காரணம், அன்னை பார்வதி தேவியால் முருகப்பெருமானுக்கு வேல் வழங்கப்பட்ட தினம் என்பதே. அந்த வேல் ஒரு ஆயுதம் மட்டுமல்ல; அது முருகனுடைய வடிவமே, மேலும் ஞானத்தின் எழுத்து வடிவம் என வீடியோவில் விளக்கப்படுகிறது. தீமையை அழிப்பதற்காக மட்டுமல்ல, மனிதனுக்குள் இருக்கும் அறியாமை, அகங்காரம், கர்ம வினைகளை உடைப்பதற்காகவே வேல் அருளப்பட்டது என்பதே தைப்பூசத்தின் ஆழமான பொருள்.

2 / 5
முருகனின் படம் வைத்து வழிபடலாம்; ஆனால் வேல் என்பது முருகனின் ஆதிவடிவம் என்பதால், வேல் வழிபாடு அனைத்து தெய்வ அருளையும் தரக்கூடியதாக கருதப்படுகிறது. சிவனும், பார்வதியும் கூட வேலின் தத்துவத்தில் அடங்கியுள்ளனர் என்ற ஆழமான சைவ கருத்தும் இதில் வெளிப்படுகிறது.

3 / 5
இந்த நாளில், முருக பக்தர்கள் விரதம் இருந்து, உடல்-மனம் தூய்மையுடன் வழிபாடு செய்கிறார்கள். காவடி எடுப்பது, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி போன்றவை மூலம் தங்களின் துன்பங்கள், பாவங்கள் நீங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். சிலர் உடல் துன்பத்தையும் ஏற்று, ஆன்மிக உயர்வை அடைவதே தைப்பூசத்தின் தத்துவம்

4 / 5
வேல் என்பது ஞான வேல், வஜ்ர வேல் என்ற இரு நிலைகளைக் கொண்டது. ஒன்று அருள் வழங்கும் வடிவம்; மற்றொன்று தீய சக்திகளை அழிக்கும் வடிவம். இந்த இரண்டும் இணைந்ததே தைப்பூசத்தின் சக்தி.அதனால் தைப்பூசம் என்பது ஒரு திருவிழா அல்ல; முருகன் உள்ளத்தில் எழும் நாள், வாழ்க்கை திசை மாறும் நாள், ஞானம் மலரும் நாள் ஆகும். உண்மையான பக்தியுடன் கொண்டாடப்படும் தைப்பூசம், மனிதனை நல்வழிக்குத் திருப்பும் ஆன்மிகப் பண்டிகையாக விளங்குகிறது.

5 / 5