Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை…உயர்நீதிமன்றம் போட்ட திடீர் தடை!

Maruthamalai Murugan Statue: மருதமலையில் வனப்பகுதியில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைப்பதற்கான இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் வருவதால் அனுமதிக்க முடியாது என்று விளக்கம்.

மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை…உயர்நீதிமன்றம் போட்ட திடீர் தடை!
184 அடி உயர முருகன் சிலை அமைக்க அனுமதியில்லை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 31 Jan 2026 06:35 AM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோவிலில் தரிசனம் செய்வதற்காக தமிழகம் மற்றும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மருதமலை வனப்பகுதியில் ரூ.110 கோடியில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டு அறிவித்தது. ஆனால், முருகன் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனவிலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையானது வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முன்னதாக, முருகன் சிலை அமைய உள்ள பகுதியில் வழக்கறிஞர் குழு ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இதேபோல, இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

500 மீட்டர் தொலைவில் கட்டுமான பணிக்கு அனுமதியில்லை

இந்த 2 அறிக்கைகளையும் பார்த்த நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து சுமார் 137 மீட்டர் தூரத்தில் முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது. இதனால், முருகன் சிலை கட்டுமான பணிக்கு அனுமதி வழங்க முடியாது. ஒருவேளை முருகன் சிலை அமைக்கப்பட்டால், தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இது காலப்போக்கில் அதிகரிக்க கூடும். இதனால், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: சிறுவனை ஆட்டோவில் கடத்தி பணம் பறிப்பு – சென்னையில் பரபரப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்

இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்

இதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலைத்துறை சார்பில், முருகன் சிலைக்கு பூஜைகள் மேற்கொள்ளப்படாது எனவும், சிலையை சுற்றி வந்து வழிபாடு நடத்த மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தற்போது, 437 மீட்டர் தொலைவில் முருகன் சிலை அமைக்க வேறொரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதி அரசர்கள், தற்போது தேர்வு செய்யப்பட்ட இடமும் 500 மீட்டர் தொலைவுக்குள் வருவதால், வேறொரு இடத்தை தேர்வு செய்து முருகன் சிலை அமைக்கலாம் என்று தெரிவித்தனர்.

யானைகள் வழித்தடமாக இருக்கும் மருதமலை

எனவே, சுவாமி சிலை அமைப்பதற்கு மாற்று இடத்தை தேர்வு செய்து அது தொடர்பான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். மருதமலை பகுதி யானைகள் வழித்தடமாக இருந்து வருகிறது. நீலகிரி காடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்வதற்கு யானைகள் மருதமலை வழித்தடத்தை பயன்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் வாட்டி வதைக்கும் பனி.. மழையும் இருக்கு.. வானிலை ரிப்போர்ட் இதோ!!