AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விசிக கேட்கும் அந்த தொகுதி.. தவெகவிடம் டீல் பேசும் திருமாவளவன்.. ரகசிய மூவ் என்ன?

VKC leader Thol Thirumavalavan: தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திடம் இருந்து ஒரு தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யுமாறு அந்தக் கட்சியின் தலைமை வலியுறுத்தி வருகிறது. இதற்கு, தவெக தலைமை சம்மதம் தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.

விசிக கேட்கும் அந்த தொகுதி.. தவெகவிடம் டீல் பேசும் திருமாவளவன்.. ரகசிய மூவ் என்ன?
விஜய், திருமாவளவன்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 06 Jun 2026 13:05 PM IST

தமிழகத்தில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதில், 2 எம்எல்ஏக்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. இதில், அந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக தவெக தலைமை தெரிவித்தது. ஆனால், திருமாவளவன் அதனை மறுத்து விட்டார். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சிலர் திமுகவில் இணை இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை சமாதானம் செய்யும் வகையில் வாரிய தலைவர் பதவி மற்றும் 5 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஒரு தொகுதியே பெறவும் விசிக தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ராஜ்யசபா எம்பி பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற முயற்சித்தது. ஆனால், அந்த பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

5 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல்

இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். அத்துடன், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியை திருமாவளவன் போட்டியிடுவதற்காக விட்டுத்தர தவெக முன் வந்தது.

மேலும் படிக்க: அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடமாகும்.. இதை தமிழக மக்கள் அறிவர்.. பெ.சண்முகம் விமர்சனம்!

மதுராந்தகம் தொகுதியை குறி வைக்கும் விசிக

ஆனால், அதனை ஏற்காத விசிக தலைமை மதுராந்தகம் தொகுதியை ஒதுக்கீடு செய்யும்படி கோரிக்கை விடுத்து வருகிறதாம். ஏனென்றால், அந்த தொகுதியில் வன்னியர்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் காரணத்தால் அங்கு விசிகவின் வேட்பாளர் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று கருதுகிறதாம். இதில், மதுராந்தகம் தொகுதியை தவெக தலைமை ஒதுக்கீடு செய்யவில்லை எனில் மற்ற பகுதிகளில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறதாம்.

தொல்.திருமாவளவனை போட்டியிட கூறும் தவெக

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட விருப்பம் தெரிவித்தால், ஒரு தொகுதியை தருவதாக தவெக கூறுகிறதாம். இதன் காரணமாக தொடர்ந்து இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்கும் மதுராந்தகம் தொகுதியை தவெக தலைமை விட்டுக் கொடுக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. இதனால், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் விசிக வேட்பாளர் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: கே.என்.நேரு மீதான ஊழல் புகார்.. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு திடீர் தடை.. நீதிமன்றம் உத்தரவு!

Follow Us