AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அப்போது கலைஞர் இருந்தார், இப்போது உதயநிதியால்…. மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

திமுகவின் முரசொலி செய்தித்தாளில் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக ராகுல் காந்தி குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இன்றைய திமுக உதயநிதியின் தலைமையால் இந்த தோல்வியை கூட எதிர்கொள்ள முடியவில்லை என விமர்சித்துள்ளார்.

அப்போது கலைஞர் இருந்தார், இப்போது உதயநிதியால்…. மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்
உதயநிதி ஸ்டாலின் - மாணிக்கம் தாகூர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Jun 2026 15:09 PM IST

சென்னை, ஜூன் 6 :   தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. தவெக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு தவெக சார்பில் இரண்டு அமைச்சர்கள் பதவி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி துரோகம் செய்ததாக திமுக தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எதிர்கட்சித் தலைவர் நன்றி கூட தெரிவிக்கவில்லை என கடுமையாக விமர்சித்திரு்தார்.

திமுக குறித்து மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

இந்த நிலையில் திமுகவின் முரசொலி செய்தித்தாளில் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக ராகுல் காந்தி குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை குழி தோண்டி புதைக்கும் செயலில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார் என்றும் இது தான் மற்ற மாநிலங்களிலும் நடைபெற்றதாகவும் தற்போது தமிழ்நாட்டிலும் நடைபெறுதவாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கட்சியில் பதவி.. அண்ணாமலையின் அதிரடி ரூல்ஸ்!!

மேலும் தான் பிரதமர் ஆவதை விட பிரவீன் சக்கரவர்த்தியை எம்.பி ஆக்குவதில் தான் ராகுல் காந்தி முயற்சித்திருக்கிறார். இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே என்ற வருத்தமே மிஞ்சுகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூரின் எக்ஸ் பதிவு

 

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், 2026ல் திமுகவை 131 இடங்களில் இருந்து 59 இடங்களாக குறைத்தது ஏன்? இதுகுறித்து திமுக தலைமை சிந்தித்ததா? திமுக ஏன் தோல்வியை அடைந்தது என அவர்கள் அலசி ஆராயாமல் ராகுல் காந்தி மீதும் காங்கிரஸ் மீதும் தாக்குதல் நடத்துவது அவர்களின் தோல்வியை மறைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.

இதையும் படிக்க : அதிமுகவுக்கு அடுத்த ஷாக்.. தவெக-வில் ஐக்கியமான 4 முன்னாள் அமைச்சர்கள்.. அதிரும் தமிழக அரசியல்!

இதற்கு முன்பு திமுக பல தோல்விகளை சந்தித்துள்ளது. ஆனால் அப்போது கலைஞர் இருந்தார். தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து மீண்டு வந்தார். ஆனால் இன்றைய திமுக உதயநிதியின் தலைமையால் இந்த தோல்வியை கூட எதிர்கொள்ள முடியவில்லை. அதற்கு மாறாக கூட்டணியில் இருந்த தோழமை கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மீது திமுகவினர் விஷ வார்த்தைகளை கக்கி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது பாஜகவிடம் காங்கிரஸ் மீதான எதிர்ப்பை நிரூபித்து அவர்களுடன் கைகோர்க்க திட்டம்போடுவதாகவே தெரிகின்றது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Follow Us