AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திருப்பரங்குன்றம் மக்கள் அமைதியையே விரும்புகின்றனர்”.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

"இந்த விவகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டிற்குள் ஏதேனும் மதவாத சக்திகள் உள்ளே நுழைந்து அரசியல் செய்ய முயன்றால், அதற்கு இந்த அரசு ஒருபோதும் இடம் தராது. மதவாத அரசியல் செய்ய நினைப்பவர்களை 100 விழுக்காடு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று அமைச்சர் நிர்மல்குமார் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“திருப்பரங்குன்றம் மக்கள் அமைதியையே விரும்புகின்றனர்”.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
அமைச்சர் நிர்மல் குமார்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 Jun 2026 13:38 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை மற்றும் விவாதங்கள் குறித்து, தமிழக அரசின் சட்டம், நீதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பிரத்யேக விளக்கம் அளித்துள்ளார். இப்பிரச்சனையைப் பயன்படுத்திப் பொது அமைதியைக் கெடுக்க முயலும் மதவாத சக்திகளுக்குத் தங்களது அரசு ஒருபோதும் இடம் தராது என்று அவர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பெரும்பாலான பொதுமக்களும், தமிழக அரசும் அமைதியான சூழலையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அண்ணாமலை விலகலால் பாஜக பலவீனமாகுமா? நயினார் நாகேந்திரன் நச் பதில்!

மக்கள் அமைதியையே விரும்புகின்றனர்:

மேலும் அவர் கூறும்போது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், அவர்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறார்கள். பெரும்பாலான பொதுமக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு என்ன மாதிரியான அமைதியான சூழ்நிலை நிலவியதோ, அதே நிலையே தற்போதும் தொடர வேண்டும் என்று தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், பத்து ஆண்டுகளுக்கு முன்பும் அங்கு எப்படிப்பட்ட சுமுகமான நிலை இருந்ததோ அதே நிலையைத் தொடர்வதுதான் தற்போதைய அரசின் கொள்கையாகும்; இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

மதவாத சக்திகளுக்கு 100% அனுமதியில்லை:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இப்பிரச்சனையைப் பயன்படுத்திப் பொது அமைதியைக் கெடுக்க நினைப்பவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். “இந்த விவகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டிற்குள் ஏதேனும் மதவாத சக்திகள் உள்ளே நுழைந்து அரசியல் செய்ய முயன்றால், அதற்கு இந்த அரசு ஒருபோதும் இடம் தராது. மதவாத அரசியல் செய்ய நினைப்பவர்களை 100 விழுக்காடு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அமைச்சர் நிர்மல்குமார் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அதிமுகவுக்கு அடுத்த ஷாக்.. தவெக-வில் ஐக்கியமான 4 முன்னாள் அமைச்சர்கள்.. அதிரும் தமிழக அரசியல்!

பழைய நிலையே தொடரும்:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்போ அல்லது அதற்கு முந்தைய பத்து ஆண்டுகளிலோ அங்கு எப்படிப்பட்ட சமூக நல்லிணக்க நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவோ, அதே பழைய சூழ்நிலைதான் தொடர வேண்டும் என்று அரசும் நினைக்கிறது. குறிப்பிட்ட சில கோவில்களில் மதியம் 12 மணி அல்லது 1 மணிக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற சில பிரத்யேகக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் நடைமுறையில் உள்ளன. அந்த விதிகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்வோர் அனுமதிக்கப்படுகிறார்கள், அதற்குப் பின் மற்றவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அமைச்சரின் இந்த அறிவிப்பின் மூலம், திருப்பரங்குன்றம் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழைய நடைமுறைகளே எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

Follow Us