AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா ? மு.க.ஸ்டாலின் கேள்வி

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையம் நிகழ்ச்சி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் ஜூன் 7, 2026 இன்று நடைபெற்றது. நிகழ்வில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான் என்பதை நீங்கள் மறக்கக் கூடாது என்று அவர் பேசினார்.

3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா ? மு.க.ஸ்டாலின் கேள்வி
மு.க.ஸ்டாலின் - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Jun 2026 14:58 PM IST

சென்னை, ஜூன் 7 : மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையம் நிகழ்ச்சி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் ஜூன் 7, 2026 இன்று நடைபெற்றது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தவெகவில் இணத்துக்கொண்டோர். அப்போது பனையூர் பாபு திமுக தலைர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளியால் ஆன செங்கோலையும் பரிசளித்தார்.

தவெக அரசு மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம்

நிகழ்வில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடக்கின்றன ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. 6 மாதங்களுக்கு இந்த ஆட்சி பற்றி பேசப்போவதில்லை என இந்த ஆட்சி பொறுப்பேற்றபோது நான் சொன்னேன். ஆனால் 6 மாதங்களுக்கு முன்பே பேச வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் இப்போது இருக்கிறது. ஆனால் 3 மாதம் கூட தாங்குமா என்ற கேள்வியோடு தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. என்றார்.

இதையும் படிக்க : “ஒரு நல்ல படம் கூட தராதவர், நல்ல ஆட்சி தருவாரா?” முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!

தொடர்ந்து பேசிய அவர், எப்போதும் ஒரு இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்துக்கு செல்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு லாபத்தை மனதில் வைத்து தான் செல்வார்கள். ஆனால் தற்போது திமுக ஆளுங்கட்சி இல்லை. இப்போது எதிர்கட்சியாக இருக்கும் திமுகவை நோக்கி நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால் பதவிக்காக நீங்கள் வரவில்லை. பணியாற்ற வேண்டும், இந்த இயக்கத்திற்கு துணை நிற்க வேண்டும், தமிழ் சமுதாயத்திற்கு பாடுபட வேண்டும் என வந்திருக்கிறீர்கள் என்றார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு

 

மேலும், நம்மை பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரும். அதற்காக வெற்றியைக் கண்கடு வெறி கொண்டு அலைந்து கொண்டிருப்பதும் இல்லை. தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் என்றைக்கும் பணியாற்றக் கூடியவன் தான் திமுக காரன் என்பதை நாம் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.

இதையும் படிக்க : “டாஸ்மாக் தனியார்மயம் ஆக்கப்படுகிறதா?”.. என்ன சொல்கிறார் அமைச்சர் விக்னேஷ்?

இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான் என்பதை நீங்கள் மறக்கக் கூடாது. நாம் வெல்ல வேண்டும், திமுக தலைமையில் ஆட்சியமைய வேண்டும் என்ற நிலையில் தேர்தலை சந்தித்தோம். நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவில் தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அப்படி அந்த கூட்டணி கட்சி தலைவர்களே நாங்கள் வந்தபோது எங்கள் கூட்டணி கட்சியின் தலைவரிடம் சொல்லிவட்டு தான் வந்திருக்கிறோம் என்கிறார்கள்.

அவர்களிடம் நீங்கள் செல்லுங்கள், அது உங்களுடைய விருப்பம்.தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் அவர்களை அனுப்பி வைத்தேன். எனவே நம்முடைய தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியேற்போம் என்றார்.

Follow Us