இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் – திமுக பங்கேற்காது என அறிவிப்பு
டெல்லியில் ஜூன் 8, 2026 அன்று நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என திமுக தலைமை அறிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்னைகளில், திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும் எனவும் திமுக அறிவித்துள்ளது.
சென்னை, ஜூன் 4 : டெல்லியில் ஜூன் 8, 2026 அன்று நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என திமுக தலைமை அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட எஸ்ஐஆர் என அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றதாக திமுக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் திமுக பங்கேற்காது’
இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், வருகிற ஜூன் 8, 2026 டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக
பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்வு
திமுகவின் எக்ஸ் பதிவு
ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது!
அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக்… pic.twitter.com/JrEF2ibKsG
— DMK (@arivalayam) June 4, 2026
மேலும், திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட எஸ்ஐஆர், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது. இந்தக் கூட்டத்தில் பங்தேற்காத அதேநேரத்தில் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்னைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்!”.. பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!!
தொடர்ந்து, இந்தியா கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திமுக இயங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்னைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள். இக்கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்னைகளில், திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்ப்டுள்ளது.
முன்னதாக மாநிலங்களவை பதவி தொடர்பாக முதல்வர் விஜய்யை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்தியா கூட்டணியில் திமுக ஒரு அங்கமாக இருக்கிறது. அதில் தற்போது ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி எனக்கு தெரியாது என்றார்.