சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது – முதல்வருக்கு உதயநிதி கடிதம்
முதல்வர் விஜய்க்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யும் முடிவை தடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம.
சென்னை, ஜூன் 4 : எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யும் முடிவை தடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், முதல்வர் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணி மருத்துவர்கள் அந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேருவதற்கான சூழலை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது கடிததத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வருக்கு எதிர்கட்சித் தலைவர் கடிதம்
முதல்வர் விஜய்க்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான 152 இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த மே 29, 2026 என உத்தரவிட்டுள்ள அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிக்க : “தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்!”.. பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!!




இந்த நிலையில் தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தங்கள் தலைமையிலான புதிய அரசின் சார்பில் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்படாத காரணத்தால் இந்த சூழல் உருவாகியுள்ளது. இது தமிழ்நாட்டின் பொது சுகாதாக் கட்டமைப்புக்கு ஆபத்தாக அமைந்திருக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெறும் கலந்தாய்வில் உள்ள 215 இடங்கள், பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மேற்கண்ட இடங்களில் 63 இடங்கள் மட்டும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு இரண்டாவது கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 152 இடங்கள் காலியாக இருந்தன.
கடந்த மே 27, 2026 அன்று தமிழ்நாடு அரசின் தேர்வு கமிட்டி இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறைவு செய்த சூழலில் தமிழ்வாணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்து, நிரப்பப்படாமல் இருக்கும் 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதத்தில் 8, 10 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற போது, திமுக அரசின் சார்பில் வெற்றிகரமாக வாதங்களை எடுத்து வைத்து, நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் செல்வதை தடுத்து வைத்திருந்தது.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரே ‘அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்குரிய 152 இடங்களை சரண்டர் செய்கிறோம்’ என ஒப்புக்கொண்ட காரணத்தால், ‘நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இதயநோய், புற்றுநோய், நரம்பியல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
இதையும் படிக்க : அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும் – நயினார் நாகேந்திரன்..
எனவே முதல்வர் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணி மருத்துவர்கள் அந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேருவதற்கான சூழலை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.