AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக ஆட்சி கவிழும், ஆளுங்கட்சியின் 2 கால்கள் உடையும் – எடப்பாடி பழனிசாமி உறுதி

சேலம் எடப்பாடி தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும். அந்த ஆட்சியின் நாற்காலியில் 4 கால்களில் 2 இரவல் வாங்கப்பட்டது என்றார்.

தவெக ஆட்சி கவிழும், ஆளுங்கட்சியின் 2 கால்கள் உடையும் – எடப்பாடி பழனிசாமி உறுதி
முதல்வர் விஜய் - எடப்பாடி பழனிசாமி
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Jun 2026 20:52 PM IST

சேலம், ஜூன் 6 : எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நன்றி தெரிவிப்பு நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும். அந்த ஆட்சியின் நாற்காலியில் 4 கால்களில் 2 இரவல் வாங்கப்பட்டது . திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்த காரணத்தால் தான் தவெக ஆட்சி அமைந்துள்ளது. விசிக,கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு இருக்கும் வரை தான் தவெக ஆட்சிய எத்தனை நாட்களுக்கு இந்த ஆட்சி நீடிக்கும் என தெரிிவில்லை என்றார்.

‘தவெக ஆட்சி கவிழும்’

மேலும் பேசிய அவர் தமிழகத்தில் ரூ.10 லட்சம் கோடி கனடன் இருப்பது தெரிந்து தான் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்ட காரணம் என்ன? தற்போது அறிவிக்கும் திட்டங்களுக்கு எவ்வளவு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என அறிவிக்கவில்லை. மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 வெற்று வாக்குறுதியா அதனை எப்போது நிறைவேற்றுவீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : அப்போது கலைஞர் இருந்தார், இப்போது உதயநிதியால்…. மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ்

 

மேலும் பேசிய அவர், தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிகாரிகளை அரசை நடத்தினால் முதல்வர் எதற்கு என மக்கள் கேட்கிறார்கள். அதிமுக தீர்ந்துபோன கட்சி அல்ல. மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைத்த கட்சி. பதவி வந்துவிட்டால் பலரும் தலைகால் புரியாமல் ஆடுகின்றனர். பதவி வரும்போது பணி வரவேண்டும். படங்களில் நடித்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்து வெல்லவில்லை என்றார்.

மேலும் பேசிய அவர் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். எந்த கொம்பனாலும் அதிமுகவை உடைக்க முடியாது. தப்புக் கணக்கு போடாதீர்கள் அதிமுகவில் வெற்றி பெற்ற நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளார்கள். அவர்களை வரலாறு மன்னிக்காது என்றார்.

இதையும் படிக்க : விசிக கேட்கும் அந்த தொகுதி.. தவெகவிடம் டீல் பேசும் திருமாவளவன்.. ரகசிய மூவ் என்ன?

தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு , உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எம்.எஸ்.எம்ஸ்ரீஆனந்தன் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அவர்களைத் தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட எம்எல்ஏகளும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us