நாளை மறுநாள் சிங்கப்பெண் திட்டம் துவக்கம்? வெளியான தகவல்
சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் வருகிற ஜூன் 9, 2026 செவ்வாய்கிழமை முதல்வர் விஜய்யால் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இதன் மூலம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, ஜூன் 7 : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை என்ற திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இந்த திட்டத்துக்கு சீருடை வெளியிடப்பட்டு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே 2 முறை திட்டம் தொடங்கப்படவிருந்து திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான காரணமும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த திட்டம் வருகிற ஜூன் 9, 2026 அன்று முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை மறுநாள் சிங்கப்பெண் திட்டம் துவக்கம்?
சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் வருகிற ஜூன் 9, 2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளிாகியுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்துக்கான தொடங்க விழா நடக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை தமிழக அரசு கொண்டு வரவுள்ளது.
இதையும் படிக்க : “பாஜகவின் ஒரே முகம் தாமரைதான்”.. அண்ணாமலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!




தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்று ம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக தவெக ஆட்சிக்கு வந்தால் சிங்கப்பெண் என்ற சிறப்பு காவல்படை உருவாக்கப்படும் என்று அறிிவித்தார். அதற்கேற்ப விஜய் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிறகு முதல் கையெழுத்தாக சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கு கையெழுத்திட்டார். இதனையடுத்து அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க : திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா?.. ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸின் முக்கிய அறிவிப்பு.. அரசியல் களத்தில் பரபரப்பு!
இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு பிரத்யேகமாக சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த சீருடை சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல்வர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை அறிமுகப்படுத்தப்படவுள்ளனர்.இந்த திட்டத்தின் மூலம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் ஐடி நிறுவன பகுதிகளில் பாதுகாப்பு வழங்கவுள்ளனர் இந்த அதிரடி படைக்கு ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த திட்டம் வருகிற ஜூன் 9, 2026 செவ்வாய் கிழமை தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இதன் மூலம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.