AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை – யூனிபார்ம் அறிமுகம் – என்ன ஸ்பெஷல்?

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக காவல்துறையில் சிறப்பு அதிரடிப்படையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் அதில் பணியாற்றும் காவல்துறையினருக்கு சிறப்பு சீரூடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த சீருடை சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை – யூனிபார்ம் அறிமுகம் – என்ன ஸ்பெஷல்?
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 May 2026 15:13 PM IST

சென்னை, மே 27 : குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக காவல்துறையில் சிறப்பு அதிரடிப்படையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதற்கு சிங்கப்பெண்  சிறப்புப் படை என பெயரிடப்பட்டுள்ள நிலையில். இந்த திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதில் பணியாற்றும் காவல்துறையினருக்கு சிறப்பு சீரூடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படைக்கு யூனிபார்ம் அறிமுகம்

தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்று ம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக தவெக ஆட்சிக்கு வந்தால் சிங்கப்பெண் என்ற சிறப்பு காவல்படை உருவாக்கப்படும் என்று அறிிவித்தார். அதற்கேற்ப விஜய் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிறகு முதல் கையெழுத்தாக சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கு கையெழுத்திட்டார. இதனையடுத்து அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க : “திமுக ஆட்சியில் 35% வரை கமிஷன்”.. அமைச்சரிடம் ஒப்பந்ததாரர்கள் அடுக்கடுக்காக புகார்!!

இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு பிரத்யேகமாக சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி அந்த சீருடையானது

  • காக்கி கலர் பேண்ட், நேவி ப்ளூ நிற அரைக்கை சட்டை வழங்கப்படும்.
  • சட்டையின் தோள்பகுதியில் இரண்டு ஸ்டார் பொறுத்தப்படும்.
  • முன்புறம் இரண்டு பாக்கெட், பட்டன்களுடன் காலர் இடம்பெற்றிருக்கும்.
  • சட்டையில் இரண்டு புறம் பாக்கெட்கள் வலதுபுறம் சட்டப்பைக்கு மேல் கருப்பு பட்டையில் தங்க நிறத்தில் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.
  • கருப்பு நிற பெல்ட், மற்றும் காலில் கருப்பு நிற ஷூ வழங்கப்பட்டிருக்கும்.
  • சட்டையின் இடது கைப் பகுதியில் போலீஸ் பேட்ஜ், தலையில் கருப்பு நிற தொப்பி அதில் உலோகத்தாலான போலீஸ் குறியீடு இடம் பெற்றிருக்கும்.
  • சட்டையின் இடதுபுற மேல் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு லோகோ வழங்கப்பட்டிருக்கும்.

தற்போது இந்த சீருடை சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல்வர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை அறிமுகப்படுத்தப்படவுள்ளனர்.இந்த திட்டத்தின் மூலம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் ஐடி நிறுவன பகுதிகளில் பாதுகாப்பு வழங்கவுள்ளனர் இந்த அதிரடி படைக்கு ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க : இதனை ஏற்க முடியாது – தவெகவிற்கு திருமாவளவன் கண்டனம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மே 27, 2026 இன்று தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல்வர் விஜய் டெல்லி சென்றுள்ள நிலையில் இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள விஜய், தமிழ்நாடு திரும்பியதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

Follow Us