“எங்கே போனது சிங்கப்பெண் படை?” முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!!
Udhayanidhi Stalin fires a barrage: மாநிலத்தின் முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான பெரம்பூர் பகுதியிலேயே சட்டம்-ஒழுங்கு கேலிக்குரியதாக மாறியுள்ளது. அங்குள்ள போதை கும்பல் ஒன்று நடுரோட்டில் புகுந்து, வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்துத் தங்களது போதை ஆட்டத்தை அரங்கேற்றியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரங்கேறி வரும் அடுத்தடுத்த அதிர்ச்சிச் சம்பவங்கள், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “மாற்றம்… மாற்றம்…” என்று முழங்கி ஆட்சிப் பொறுப்பேற்றவர்களின் நிர்வாகத்தில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க: விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு.. குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஊடகங்களில் வெளியான அதிர்ச்சிப் பட்டியல்:
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதல்வரின் தொகுதியிலேயே அட்டூழியம்:
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த…
— Udhay – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) May 25, 2026
மாநிலத்தின் முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான பெரம்பூர் பகுதியிலேயே சட்டம்-ஒழுங்கு கேலிக்குரியதாக மாறியுள்ளது. அங்குள்ள போதை கும்பல் ஒன்று நடுரோட்டில் புகுந்து, வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்துத் தங்களது போதை ஆட்டத்தை அரங்கேற்றியுள்ளது. முதல்வரின் சொந்தத் தொகுதிக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்பு என்னாவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
“எங்கே போனது சிங்கப்பெண் படை?”:
தேர்தல் களம் மற்றும் பிரச்சார மேடைகளில் சட்டம்-ஒழுங்கு குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் வீர வசனங்களை முழங்கிய முதலமைச்சர் விஜய், தற்போது மாநிலமே பற்றி எரியும் போது ஏன் மௌனம் சாதிக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். “இது தமிழ்நாடா அல்லது உத்தரபிரதேசமா?” என்ற கேள்வியோடு, தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ எங்கே போனது என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிக்க: “கத்தியதால் கழுத்தை நெறித்தேன்.. உடலை முள்புதரில் வீசினேன்”.. கோவை சிறுமி கொலையில் குற்றவாளி பகீர் வாக்குமூலம்!
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.