“திமுக ஆட்சியில் 35% வரை கமிஷன்”.. அமைச்சரிடம் ஒப்பந்ததாரர்கள் அடுக்கடுக்காக புகார்!!
ஒப்பந்ததாரர்களின் இந்தப் புகார்களைக் கேட்டறிந்த மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கடந்த ஆட்சியில் நடந்த இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி கண்டிப்பாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதோடு, மின் வாரிய ஒப்பந்தங்களில் இனி புரோக்கர் முறை முற்றிலும் ஒழிக்கப்படும்.
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களும், அவர்களது பிரதிநிதிகளும் ஒப்பந்ததாரர்களிடம் 35% வரை கமிஷன் கேட்டுப் பெற்றதாக அமைச்சர் நிர்மல்குமாரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் துறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். டெண்டர் மதிப்பீடுகளை முழுமையாக மறுபரிசீலனை செய்து, புதிய கொள்கையைக் கொண்டு வருதன் மூலம் இந்த அத்தனைப் பிரச்சினைகளும் நிரந்தரமாகக் களையப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் மின்துறையின் விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்ற முக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் மின்துறைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தின் போது, தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மின்துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் மற்றும் தவறுகளைப் பட்டியலிட்டு அமைச்சரிடம் நேரடியாகப் புகார் அளித்தனர்.
இதையும் படிக்க : விவசாய கடன் தள்ளுபடி.. தில்லுமுல்லு வேலை; திசைத்திருப்பவே இந்த அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி சாடல்..
ஒப்பந்ததாரர்கள் முன்வைத்த அதிரடி புகார்கள்:
மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் பின்வருமாறு, கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களும், அவர்களது பிரதிநிதிகளும் ஒப்பந்ததாரர்களிடம் 35% வரை கமிஷன் கேட்டுப் பெற்றுள்ளனர். கடந்த காலங்களில் டெண்டர் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட நபரை (Broker) நேரில் பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு மட்டுமே டெண்டர்கள் வழங்கப்பட்டன. முந்தைய ஆட்சியில் அமைச்சர்களுக்கு நெருக்கமான ஒருசில ஒப்பந்ததாரர்களைத் தவிர, மற்ற தகுதியான ஒப்பந்ததாரர்கள் யாரும் டெண்டர் எடுக்க முடியாத நிலை நிலவியது.
தேர்தல் நேரத்திலும் நெருக்கடி:
சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும் கூட, ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டுப் பல வழிகளில் கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. கமிஷன் கேட்டு மிரட்டிய நிறுவனங்கள், அதுமட்டுமன்றி பல போலி ‘செல் நிறுவனங்களை’ தொடங்கி, தங்களுக்குப் போட்டியாக டெண்டரில் களமிறக்கி ஏகப்பட்ட ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டன.
கமிஷன் கேட்டு நெருக்கடி:
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காசி என்பவர்தான் முந்தைய ஆட்சியில் மின்துறையின் ‘பவர் சென்டராக’ விளங்கி, அனைத்துப் பணிகளுக்கும் குறிப்பிட்ட சதவீத கமிஷன் கேட்டு நெருக்கடி கொடுத்தார் என்றும் அதற்குத் தாங்களே சாட்சி என்றும் ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டினர். 90 நாட்களில் பணம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, அவ்வாறு வழங்காமல் இழுத்தடிப்பதோடு, மின்வாரியத்தின் தாமதத்தால் பணிகள் தடையானாலும் ஒப்பந்ததாரர்களிடமே அபராதப் பணம் கேட்கின்றனர். எனவே, பணி முடிந்த பின்னர் பணத்தை வன வாரியம் தாமதமின்றி வழங்க வேண்டும்.
இதையும் படிக்க: செங்கல் சூளை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டல்.. தவெக நிர்வாகி பதவி பறிப்பு.. கட்சி தலைமை அதிரடி!
அமைச்சர் கொடுத்த உறுதி:
ஒப்பந்ததாரர்களின் இந்தப் புகார்களைக் கேட்டறிந்த மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கடந்த ஆட்சியில் நடந்த இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி கண்டிப்பாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதோடு, மின் வாரிய ஒப்பந்தங்களில் இனி புரோக்கர் முறை முற்றிலும் ஒழிக்கப்படும். தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது எந்தவொரு தனி நபருக்குமானது அல்ல; அது சிறு, குறு தொழில் முனைவோருக்கும் சேர்ந்ததே ஆகும். இனி வரும் காலங்களில் அனைவருக்கும் ஒளிவு மறைவின்றி சமமான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.