AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இதனை ஏற்க முடியாது – தவெகவிற்கு திருமாவளவன் கண்டனம்

அதிமுக எம்எல்ஏகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வரும் நிலையில் இதனை ஏற்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தவெக ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதனை ஏற்க முடியாது – தவெகவிற்கு திருமாவளவன் கண்டனம்
திருமாவளவன் - இசக்கி சுப்பையா - செங்கோட்டையன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 May 2026 19:07 PM IST

அதிமுக எம்எல்ஏகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் மேல 26, 2026 இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் என்.ஆனந்த் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார். இதனையடுத்து அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

திருமாவளவன் கண்டனம்

இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏகள் தவெகவில் இணைந்து வருவது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த நிலையில், அதிமுகவினர் தவெகவில் இணைவது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்… பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பு!

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அதனை ஏற்க முடியாது. தவெக இதனை ஊக்கப்படுத்தக் கூடாது. இதனை ஆரோக்கியமான அரசியலாக விசிக கருதவில்லை என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், எந்த சூழ்நிலையிலும் தவெக ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். அந்த நம்பிக்கையோடு தவெக ஆட்சியை திறம்பட செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

 

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல. அதிமுகவின் மூலம் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று ராஜினாமா செய்திருப்பதும், உடனடியாக அவர்கள் அனைவரும் தவெகவில் சேர்ந்திருப்பதும் தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இதையும் படிக்க : BREAKING: அதிமுகவுக்கு தொடர் சறுக்கல்… எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா.. காரணம் இதோ!

தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் அடுக்கடுக்கான குழப்பமும், கோஷ்டி மோதலும் ஏற்பட்டு ராஜினாமா என்ற நிலைக்கு வந்துள்ளது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகளில் சேர்ந்திருப்பது அவர்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இந்த போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கட்டிக்காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us