AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா

Isakki Subbaiah Joins TVK : அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் , ஜெயக்குமார், சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், தற்போது இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா
இசக்கி சுப்பையா
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 May 2026 14:55 PM IST

சென்னை, மே  26 : அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா மே 26, 2026 அன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஏற்கனவே பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், மதுராந்தகம் எம்எல்ஏ குமரவேல், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில் தற்போது இசக்கி சுப்பையாவும் தவெகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து 5 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.

அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் , ஜெயக்குமார், சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், தற்போது இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற தமிழக முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியினை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து தற்போது காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 5 ஆகவுள்ளது. மேலும், சில எம்எல்ஏகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : ‘நியாயப்படுத்த முடியாது.. குதிரபேர அரசியல் செய்யும் தவெக’.. காங்கிரஸ் கட்சி ஜோதிமணி கண்டனம்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா

 

முன்னதாக தவெக ஆட்சியமைக்க அதிமுகவில் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தவெக ஆதரவு அதிமுக எம்எல்ஏகளில் ஒரு சிலருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தகள் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சியினருக்கு மட்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. இதனயைடுத்து தவெகவுக்கு வழங்கப்பட்ட ஆதரவில் இருந்து அந்த கட்சியினர் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் பொதுச்செயலாளர் என எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையும் படிக்க : 4 தொகுதிகள் காலி.. அடுத்து என்ன நடக்கும்? தவெகவுக்கு இது மேலும் பலமா?

இந்த நிலையில் தான் அதிமுகவினர் தற்போது தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது விசுவாசம் கொண்டுள்ள உண்மைத் தொண்டர்களின் கடுமையான உழைப்பால், தியாகத்தால் வெற்றிபெற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து, கோட்டையின் கீழ்தளத்தில் உள்ள சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதம் எழுதி வாங்குவதும், அடுத்த 10 நிமிடத்தில் முதல் மாடியில் உள்ள த.வெ.க. அமைச்சர் ஒருவரின் அறையில் அவர்களுடைய கைகளில், கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஓரங்க சதி நாடகத்தை, குதிரை பேரத்தை அம்பலப்படுத்தி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us