AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குதிரை வேகத்தில் நடக்கும் ‘குதிரை பேரம் – திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம்..

‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனக் கூறி கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரஸின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!” என பதிவிட்டுள்ளார்.

குதிரை வேகத்தில் நடக்கும் ‘குதிரை பேரம் – திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 25 May 2026 20:06 PM IST

மே 25, 2026: “தூய சக்தி” என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், “துயர சக்தி” என அம்பலப்பட்டு இருக்கிறார்கள் என தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக்கழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல், “குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்” எனவும் சுட்டிக்காட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.

மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்:

அவரது பதிவில், “‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறாக வாங்குவது.

Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரை பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்திலேயே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தானா மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்?

மேலும் படிக்க: கீழ்தளத்தில் ராஜினாமா, மேல் தளத்தில் கட்சியில் இணைப்பா? கீழ்த்தரமான அரசியல் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..

‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனக் கூறி கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரஸின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!” என பதிவிட்டுள்ளார்.

அதிமுக உட்கட்சி விவகாரம்:

அண்மைக்காலமாக அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ள சூழலில், கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் ராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகரிடம் வழங்கினர். ராஜினாமா கடிதம் அளித்த கையோடு, தலைமைச் செயலகத்தின் மேல்தளத்தில் அமைச்சர் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றனர். மேலும், ராஜினாமா கடிதம் அளித்த ஒரு மணி நேரத்திலேயே அது ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் “குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்” என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

Follow Us