AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

த.வெ.கவிற்கு குதிரை பேரம் நடத்த எந்த அவசியமும் இல்லை.. திமுக செய்ததற்கு பேர் என்ன? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..

அமைச்சர் ஆதார் அர்ஜுனா, பனையூர் கட்சி அலுவலகத்தில் வைத்து விளக்கமளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மூவரும் பதவியை ராஜினாமா செய்த பிறகே என்னை சந்தித்தார்கள். முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகத்தில் மூவரும் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தனர் என தெரிவித்துள்ளார்.

த.வெ.கவிற்கு குதிரை பேரம் நடத்த எந்த அவசியமும் இல்லை.. திமுக செய்ததற்கு பேர் என்ன? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 May 2026 07:06 AM IST

மே 26, 2026: குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் தமிழகத்திற்கு, கழகத்திற்கு இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் களம் மீண்டும் பரபரப்பாக தொடங்கியுள்ளது. நேற்றைய தினம், அதிமுகவில் எஸ்.பி., வேலுமணி அணியில் இருந்து மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய மூவர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜெயசீரி பிரபாகரிடம் வழங்கிய அவர்கள், அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆதார் அர்ஜுனாவை சந்தித்தது பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது.

த.வெ.கவிற்கு குதிரை பேரம் நடத்த எந்த அவசியமும் இல்லை:

இது தொடர்பாக அமைச்சர் ஆதார் அர்ஜுனா, பனையூர் கட்சி அலுவலகத்தில் வைத்து விளக்கமளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மூவரும் பதவியை ராஜினாமா செய்த பிறகே என்னை சந்தித்தார்கள். முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகத்தில் மூவரும் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தனர்.

மேலும் படிக்க: குதிரை வேகத்தில் நடக்கும் ‘குதிரை பேரம் – திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம்..

திமுக செய்தது குதிரை பேரம் இல்லையா ?

தலைமைச் செயலகத்தில் ஒரு அமைச்சர் என்ற முறையில் என்னை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். மூவர் இணைந்தது குதிரை பேரம் இல்லை. ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தது குதிரை பேரம் இல்லையா?

மேலும் படிக்க: எனது தம்பியை முதல்வராக பார்ப்பது சந்தோஷமாக இருந்தது.. முதல்வர் விஜய் எல்லாவற்றையும் சரி செய்வார் – நடிகை குஷ்பு நெகிழ்ச்சி

மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்களை உடைத்து கட்சியில் சேர்த்தால்தான் அது குதிரை பேரம். எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக திட்டமிட்டது அதிமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்களுக்கு வலியை கொடுத்தது.

த.வெ.க – புதிய அதிமுக:

தமிழக வெற்றி கழகத்தை புதிய அதிமுகவாக பார்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கூறியுள்ளனர். மேலும் பலரும் எங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்து வருகின்றனர்.

நாங்கள் தூய்மையான ஆட்சி நடத்துகிறோம். அதனால் அன்புடனும் நம்பிக்கையுடனும் அதிமுக தொண்டர்களை வரவேற்கிறோம். இடைத்தேர்தல்கள் வரும்போது நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்” என தெரிவித்தார்.

Follow Us