AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய் – வெளியான பயண திட்டம்

CM Vijay Travel Plan : கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீடு உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கும் இடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழக முதல்வர் விஜய் அக்டோபர் 13, 2026 நாளை ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்கிறார். இந்த நிலையில் முதல்வரின் பயண திட்டம் வெளியாகியுள்ளது.

ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய் – வெளியான பயண திட்டம்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Oct 2026 19:47 PM IST

சென்னை, அக்டோபர் 11 : கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீடு உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கும் இடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழக முதல்வர் விஜய் அக்டோபர் 13, 2026 நாளை ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்கிறார். அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்துப் பேசவிருக்கிறார். மேலும் ஆந்திர துணை முதல்வரும் பிரபல நடிகருமான பவன் கல்யாணையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய் – வெளியான பயண திட்டம்

இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் ஆந்திர பயண திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அக்டோபர் 11, 2026 அன்று மாலை 3.30 மணிக்கு விஜயவாடாவில் உள்ள விமான நிலையத்தை அவர் சென்றடைகிறார். அதனைத் தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு நடைபெறுகிறது. சந்திப்புக்குப் பிறகு, மாலை 6 மணிக்கு விஜயவாடாவில் உள்ள கனக துர்கா அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் தரிசனம் செய்கிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு விஜயவாடாவிலிருந்து சென்னைக்குப் புறப்படுகிறார்.

இதையும் படிக்க : திருநெல்வேலியில் நாளை மின் தடை.. எங்கெங்கு தெரியுமா? முழு விவரம் இதோ!

சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் கிருஷ்ணா நதிநீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நீர்ப் பங்கீடு மற்றும் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் குறித்து இரு முதல்வர்களும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ், சென்னையின் குடிநீர்த் தேவைக்காக ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்துக்கு வழங்க இரு மாநிலங்களுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. இதன்படி, ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட வேண்டும்.

ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அளவுக்குத் தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே எழுந்து வருகிறது. இந்தச் சூழலில், இரு மாநில முதல்வர்களுக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்குப் பாய்ந்து வரும் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டுவது தொடர்பான விவகாரம் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட வாய்ப்புள்ளது. அத்தகைய அணைகள் கட்டப்பட்டால், தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறையக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், இந்த விவகாரமும் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிக்க : திருவள்ளூரில் சோக சம்பவம்.. கோபத்தில் விஷம் குடித்த மனைவி.. அதே விஷத்தை குடித்த கணவன்.. அடுத்தடுத்து பிரிந்த உயிர்!

முன்னதாக, காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, கர்நாடகா சென்று அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமாரைச் சந்திக்க விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது வருகைக்குக் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கர்நாடக முதல்வர் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அண்டை மாநில முதல்வருடன் விஜய் நடத்தும் இந்தப் பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us