AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தலைமைச் செயலகத்தில் திடீர் மின்தடை: காரணம் இதுதான் – அரசு விளக்கம்

Chennai Secretariat Power Cut : சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் அக்டோபர் 11, 2026 இன்று காலை மின்தடை ஏற்பட்டது. தலைமை செயகலத்திலேயே மின் தடை ஏற்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மின்தடைக்கான காரணம் குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் திடீர் மின்தடை: காரணம் இதுதான் – அரசு விளக்கம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Oct 2026 20:42 PM IST

சென்னை, அக்டோபர் 11 : சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் அக்டோபர் 11, 2026 இன்று காலை மின்தடை ஏற்பட்டது. தலைமை செயகலத்திலேயே மின் தடை ஏற்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மின் சுவிட்ச் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டதாகவும், பழுது உடனடியாகச் சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் திடீர் மின்தடைக்கான காரணம்

மாநிலத்தின் பல பகுதிகளில் மின்வெட்டுப் பிரச்னை விவாதப் பொருளாகியுள்ள நிலையில், அரசின் தலைமை நிர்வாக மையமான தலைமைச் செயலகத்திலேயே மின்தடை ஏற்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மின்வாரியத்தின் , தலைமைச் செயலகப் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டுமே காலை நேரத்தில் தற்காலிகமாக மின் விநியோகம் தடைபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்துத் தளங்களிலும் மின் விநியோகம் எந்தத் தடையுமின்றி வழக்கம்போல் இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் – மின்வெட்டை சமாளிக்க அரசு நடவடிக்கை

மேலும் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள மின் விநியோகக் கட்டமைப்புகளைப் பொதுப்பணித் துறையின் கட்டடங்கள் பிரிவு பராமரித்து வருகிறது. முதல் தளத்துக்கு மின்சாரம் வழங்கும் நான்கு மின் சுவிட்சுகளில் ஒன்றின் பி பேஸ்மின் இணைப்பில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது ஆய்வில் கண்டறியப்பட்டது. தகவலறிந்ததும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டனர். பழுதடைந்த சுவிட்சைச் சரிசெய்து, மின் விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர்.

இதனையடுத்து அக்டோபர் 11, 2026 இன்று காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் இயல்பான மின் விநியோகம் முழுமையாக சரி செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தின் அனைத்துத் தளங்களிலும் மின் விநியோகம் சீராக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

இதற்கிடையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது பதிவில், தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் இன்று காலை ஏற்பட்ட மின் தடை காரணமாக அமைச்சர்கள் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின. இது தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மின்வெட்டு தமிழக அரசின் அதிகார பீடமான தலைமைச் செயலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது.

இதையும் படிக்க : மதுபோதையில் வருவதால் தொல்லை.. தூங்கிய கணவர் மீது டீசல் ஊற்றி தீ வைப்பு.. காரைக்காலில் கொதித்தெழுந்த மனைவி!

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் நீடித்து வருகிறது. மின்வெட்டால் பாதிக்கப்படாத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மின் தடை இப்போது தலைமை செயலகம் வரை சென்றிருப்பது நிலைமை மோசமடைந்திருப்பதையே காட்டுகிறது. இந்த நிலைமை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் மின் தேவைக்கும், மின்சாரம் கிடைப்பதற்கும் பெரும் இடைவெளி காணப்படுவது தான் மின்வெட்டுக்கு காரணம். இதை சமாளிக்க முதலில் 2000 மெகாவாட்டும், பின்னர் 4500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அரசு தெரிவித்தது. அதன் பிறகும் மின் வெட்டும், மின் தடையும் தொடர்வது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us