AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரதமரின் கதி சக்தி திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள்! இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய மாற்றம்

PM GatiShakti Completes Five Years : இந்தியாவில் சாலை, ரயில், துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட பிரதமரின் கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான் திட்டம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

பிரதமரின் கதி சக்தி திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள்! இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய மாற்றம்
பிரதமர் மோடி
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Oct 2026 21:07 PM IST

இந்தியாவில் சாலை, ரயில், துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட பிரதமரின் கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான் திட்டம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது நாடு முழுவதும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய டிஜிட்டல் தளமாக வளர்ந்துள்ளது.

மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புத் துறைகளை ஒரே தளத்தில் இணைத்து, திட்டங்களை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் செயல்படுத்துவதற்கு இந்தத் திட்டம் உதவுகிறது. தற்போது 58 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளும், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

கதி சக்தி திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், நீர்வழிப் போக்குவரத்து, விமான நிலையங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக் கட்டமைப்புகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இந்தத் திட்டங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால், கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்படுவதுடன் செலவுகளும் அதிகரிக்கலாம். இதைத் தவிர்க்கும் வகையில், பல்வேறு துறைகளின் தகவல்களை ஒரே புவியியல் தகவல் அமைப்புத் தளத்தில் இணைத்து, திட்டமிடலையும் முடிவெடுக்கும் செயல்முறையையும் மேம்படுத்துவதே கதி சக்தி திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கதி சக்தி திட்டத்தின் கீழ் ஏழு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதன் படி சாலைப் போக்குவரத்து ரயில்வே, துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து, பொதுப் போக்குவரத்து, சரக்கு மற்றும் தளவாடக் கட்டமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், பொருட்களையும் பயணிகளையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதை எளிதாக்குவதுடன், கடைசி மைல் இணைப்பையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us