டெல்லி – சென்னை விமானத்தில் பவர் பேங்க்கால் தீ விபத்து – பரபரப்பு தகவல்
டெல்லியிலிருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், ஷம்ஷாபாத்தில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. ஒரு பயணியின் 'பவர் பேங்க்'கிலிருந்து தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியிலிருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், ஷம்ஷாபாத்தில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. ஒரு பயணியின் ‘பவர் பேங்க்’கிலிருந்து தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி – சென்னை விமானத்தில் பவர் பேங்க்கால் தீ விபத்து
டெல்லியிலிருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அவசரத் தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியான தகவல்களின்படி, விமானம் டெல்லியிலிருந்து சென்னைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பயணியின் பவர் பேங்கிலிருந்து எதிர்பாராத விதமாகத் தீப்பிடித்தது. இந்தச் சம்பவம் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலைமையை உணர்ந்த விமானக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானக் குழுவினரின் துரித நடவடிக்கையால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானங்களில் பவர் பேங்க் பயன்பாடு குறித்த முன்னெச்சரிக்கைகள்
லித்தியம் பேட்டரிகள் அதிக வெப்பமடைதல், சேதமடைதல் அல்லது பழுதடைதல் ஆகியவற்றால் தீ விபத்து ஏற்படும் அபாயமுள்ளது. கடந்த காலங்களிலும் விமானங்களில் பவர் பேங்க் தொடர்பான தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. விமானங்களில் பவர் பேங்குகளைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்வதற்குத் தடை விதித்து விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.