திருக்குறள் வாழ்க்கைக்கான வழிகாட்டி… ரஷ்ய அதிபருக்கு திருக்குறள் பரிசு – மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
PM Modi Praises Thirukkural: சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி விழாவில் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, "வாழ்க்கையில் புதிதாக கற்க விரும்புவோருக்கு திருக்குறள் ஒரு வழிகாட்டி. சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறள் பரிசளித்தேன். பல உன்னத கருத்துகளை திருவள்ளுவர் தெரிவித்துள்ளார். என்றார்.
சென்னை, அக்டோபர் 11 : சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி விழாவில் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, “வாழ்க்கையில் புதிதாக கற்க விரும்புவோருக்கு திருக்குறள் ஒரு வழிகாட்டி. சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறள் பரிசளித்தேன். பல உன்னத கருத்துகளை திருவள்ளுவர் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி மீதான அன்பு மேலும் பெருகியுள்ளது. எங்கு சென்றாலும் தமிழ் இலக்கியங்கள், பண்பாடுகளை சுமந்து செல்லுங்கள் என்றார்.
‘திருக்குறள் வாழ்க்கைக்கான வழிகாட்டி’
பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை, மற்றும் ரூ.1300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க : மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை, கோதாவரி – காவரி இணைப்பு – பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை




அதனைத் தொடர்ந்து சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக அளித்தேன். வாழ்நாள் முழுவதும் புதிது புதிதாகக் கற்க விரும்புவோருக்கு திருக்குறள் ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு. இன்று திருவள்ளுவரை நினைவுகூர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ் இலக்கியத்தின் மகத்தான ஆளுமை மகாகவி பாரதியார். பாரதி சொன்னபடி அச்சமின்றி வாழுங்கள். நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர். காசி வாழ் மக்கள் பாரதியை நினைவுகூர்கின்றனர். பயணம் மூலம் தமிழ் மீதான என் அன்பு அதிகரித்தது. தமிழின் சிறப்பை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றார்.
மேலும் பேசிய அவர்”பயணம் மேற்கொள்வதின் மூலம் தமிழ் மொழி மீதான என் அன்பு மேலும் மேலும் எனக்கு பெருகியது. இந்தியாவை அதிகமாக சுற்றி பாருங்கள் இந்தியாவில் எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரம், கவிதை, மரபுகளை சுமந்து செல்லுங்கள், இந்தியா முழுவதும் இருப்பவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார்.
இதையும் படிக்க : வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ பயணம் – யுபிஐ மூலம் டிக்கெட் எடுத்த பிரதமர் மோடி
மேலும் பேசிய அவர், “2030 ஆம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா தயாராகி வருகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இந்தியாவின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. 2036-ல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிகளிலும் நாம் முன்னேறி வருகிறோம். “ஒவ்வொரு இளைஞரிடமும் ஒரு திறமை இருக்கிறது. இந்தியாவின் உண்மையான ஹீரோக்கள் இளைஞர்கள்தான். அவர்களின் துடிப்பும் உற்சாகமும் எனக்கு மேலும் பலம் சேர்க்கிறது என்றார்.