ரெப்போ வட்டி விகிதம் உயர்வு.. இவர்களுக்கு கவலை இல்லை.. லாபம் தான்!
RBI Repo Rate Hike Positive Impact On FDs | இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதன் காரணமாக பலருக்கு சிக்கல் உருவாகியுள்ளது. ஆனால், ரெப்போ வட்டி உயர்வால், சிலருக்கு நன்மை கிடைக்க உள்ளது. யார் யாருக்கு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாதிரி புகைப்படம்
- இந்திய ரிசர்வ் வங்கி பல மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. ரெப்போ வட்டி விகித உயர்வு குறித்து பல்வேறு தரப்பினரும் கவலையில் உள்ளனர். காரணம், ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் கடன்களுக்கான வட்டி விகிதங்களும் உயரும் என்பதால் தான்.
- ரெப்போ வட்டி விகித உயர்வு பலருக்கு கவலை தந்திருந்தாலும், சிலருக்கு மகிழ்ச்சியை தரும் விதமாக அமைந்துள்ளது. அதாவது, நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு இந்த ரெப்போ வட்டி விகித உயர்வு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
- காரணம், ரெப்போ வட்டி என்பது வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் விகிதம் ஆகும். எனவே, ஆர்பிஐ ஒவ்வொரு முறை இந்த ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும்போதும் வங்கிகள் தாங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்கள் மற்றும் திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தும்.
- அந்த வகையில் தான், ஆர்பிஐ ரெப்போ வட்டியை உயர்த்தும்போதெல்லாம் வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களையும் உயர்த்தும். இதன் காரணமாக தான், நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த வட்டி விகித உயர்வால் அதிக லாபம் கிடைக்கும்.
- இந்திய ரிசர்வ் வங்கி 5.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் உயர்த்தி ரெப்போ வட்டி விகிதத்தை 5.50 சதவீதமாக வைத்துள்ளது. இந்த நிலையில், இதற்கு ஏற்ப வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டியை உயர்த்தும் பட்சத்தில் முதலீட்டாளர்களுக்கு கனிசமான லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us




