2026-ல் 16% சரிந்த தங்கம் விலை.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?
Silver Dropped 16 Percentage In 2026 | தங்கம் மற்றும் வெள்ளி நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டில் மட்டும் வெள்ளி விலை 16 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு (Gold) மட்டுமன்றி, வெள்ளிக்கும் (Silver) சிறந்த ஆண்டாக அமையவில்லை. காரணம், தங்கத்தை போலவே வெள்ளியும் இந்த ஆண்டு மிக கடுமையான சரிவை சந்தித்தது. சர்வதேச சந்தை நிலவரத்தின் படி, இந்த ஆண்டு தங்கம் விலை 3 சதவீதம் சரிவை சந்தித்துள்ள நிலையில், வெள்ளி விலை 16 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. இவ்வாறு குறுகிய கால இடைவெளியில் தங்கத்தை விட வெள்ளி சரிவில் இருந்தாலும், நீண்ட கால முதலீடுகளில் வெள்ளி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.
தங்கம் Vs வெள்ளி : குறுகிய கால இழப்புகள், நீண்ட கால ஆதாயங்கள்
| காலம் | வெள்ளி | தங்கம் | செயல்திறன் |
| 1 மாதம் | -8.14 சதவீதம் | -3.83 சதவீதம் | தங்கம் |
| 6 மாதங்கள் | -20.14 சதவீதம் | -12.19 சதவீதம் | தங்கம் |
| ஆண்டு முதல் இந்த தேதி வரை | -16.53 சதவீதம் | -3.14 சதவீதம் | தங்கம் |
| 1 வருடம் | 23.80 சதவீதம் | 3.81 சதவீதம் | வெள்ளி |
| 5 ஆண்டுகள் | 167.71 சதவீதம் | 138.77 சதவீதம் | வெள்ளி |
| 10 ஆண்டுகள் | 249.72 சதவீதம் | 233.98 சதவீதம் | வெள்ளி |
மேலே குறிப்பிட்டுள்ளதை போல குறுகிய கால முதலீடுகளுக்கு தங்கம் சிறந்த லாபத்தை கொடுத்திருந்தாலும், நீண்ட கால முதலீடுகளுக்கு வெள்ளியே அதிக லாபத்தை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க : ஜனவரி மாதத்துக்கு தள்ளிப்போகிறதா எம்டிஆர்?.. வெளியான முக்கிய தகவல்.. காரணம் இதுதான்!




நீண்ட கால முதலீடுகள் கூறுவது என்ன?
வெள்ளி குறுகிய காலத்தில் மிக கடுமையான சரிவை சந்தித்தாலும், நீண்ட கால முதலீடாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் நல்ல லாபத்தையே தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஜே.பி.மார்கன் குளோபல் ரிசர்ச் தனது சமீபத்திய அறிக்கையில், வெள்ளி விலைக்கான இலக்கை 84 டாலரில் இருந்து 70 டாலராக குறைத்துள்ளது. இந்த ஆண்டு சோலார் துறையிலிருந்து வெள்ளிக்கான தேவை சுமார் 30 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க : புதிய கேஸ் இணைப்புகளை வழங்க மறுக்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. தேவைக்கு என்ன செய்யலாம்?
சில்வர் இன்ஸ்டிடியூட்டும் இதேபோன்ற ஒரு மந்தமான கணிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, 2026 ஆம் ஆண்டின் மின் மற்றும் எலக்ட்ரானிக் துறைகளில் இருந்து ஒட்டுமொத்த வெள்ளி தேவை சுமார் 10 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.