UPI மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி எப்போது?.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?
Faster PF Withdrawals via UPI and ATM Soon | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மிக விரைவாக சேவைகளை வழங்கும் இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் விரைவாகவும், எளிதாகவும் சேவைகளை பெறும் வகையில் இபிஎஃப்ஓ 3.0 (EPFO 3.0) அம்சத்தை அறிமுகம் செய்ய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊழியர்களும் இந்த அம்சம் எப்போது அமலுக்கு வரும் என மிகுந்த அவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான், அது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓ 3.0 அம்சம் என்றால் என்ன?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம், இணையதளம் மூலம் ஊழியர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருங்கிறது. அதாவது, இருப்பு சோதனை செய்வது, பணம் எடுக்க விண்ணப்பிப்பது, நாமினியை இணைப்பது உள்ளிட்ட பெரும்பாலான சேவைகளை இணையதளம் மூலமே பெற்றுக்கொள்ள வழிவகை செய்துள்ளது.
இதையும் படிங்க : தீபாவளிக்கு முன்பு ரிலீசாகும் 2 புது கார்கள்… எஸ்யூவி வகையில் எகிறும் எதிர்பார்ப்பு!




இந்த நிலையில் தான், ஊழியர்கள் விரைவாகவும், எளிதாகவும் சேவைகளை பெற இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைச்சகம் அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது பிஎஃப் பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி ஆகியவற்றை கொண்டு இந்த இபிஎஃப்ஓ 3.0 தயார் செய்யப்பட்டு வருகிறது.
எப்போது அமலுக்கு வரும் – வெளியான முக்கிய தகவல்
இந்த இபிஎஃப்ஓ 3.0 அம்சம் விரைவில் அமலுக்கு வரும் என கூறப்பட்டு வந்த நிலையில், அது எப்போது பயன்பட்டுக்கு வரும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்து வந்தது. இந்த நிலையில் தான் அது தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இபிஎஃப்ஓ அமைப்பு யுபிஐ அடிப்படையிலான பணத்தை எடுக்கும் வசதிக்காக சில முக்கிய வங்கிகள் உடன் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : தீபாவளி ஷாப்பிங் முன்னோட்டம்.. அமேசான், பிளிப்கார்ட்டில் தள்ளுபடி தொடக்கம்.. என்ன எதிர்பார்க்கலாம்?
இந்த சோதனை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சேவை அதிகாரப்பூர்வமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.