முதலீடு செய்ய சிறந்த ஃபார்முலா.. அசட் அலோகேஷன்.. அப்படி என்றால் என்ன?
Asset Allocation for Smarter Investments | சமீப காலமாக நிலையான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பலரும் சேமிப்பு அல்லது முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், திட்டமிட்டு முதலீடு செய்ய உதவும் அசல் அலோகேஷன் என்றால் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் நாளுக்கு நாள் பணவீக்கம் (Inflation) அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக விலைவாசியும் பெருமளவு உயர்வை சந்தித்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தள்ளாடும் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே தான், எதிர்காலத்தை நிதி பாதுகாப்பு கொண்டதாக மாற்ற அனைவரும் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், முதலீடு செய்பவர்கள் அதனை ஸ்மார்டாக செய்ய பயன்படுத்த வேண்டிய அசட் அலோகேஷன் (Asset Allocation) பற்றியும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
அசட் அலோகேஷன் என்றால் என்ன?
அசட் அலோகேஷன் என்பது ஒரு முதலீட்டாளர் தனது பணத்தை பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி ஆகிய வெவ்வேறு முதலீடுகளில் பிரித்து பிரித்து முதலீடு செய்வது ஆகும். இதன் முக்கிய நோக்கம் முதலீட்டின் ஆபத்தை குறைத்து அதிகபட்ச லாபத்தை சமநிலையான முறையில் பெறுவது ஆகும்.
இதையும் படிங்க : 20 ஆண்டுகளில் ஓய்வை திட்டமிட்டுள்ளீர்களா?.. எவ்வளவு பணம் தேவைப்படும்?




அசட் அலோகேஷன் ஏன் முக்கியம் – முக்கிய அம்சங்கள்
ஆபத்து மேலாண்மை
ஒரே முதலீட்டில் முதலீடு செய்வது பெரிய சிக்கலில் முடிந்துவிடும். உதாரணமாக, ஒருவர் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்கிறார் என்றால் சந்தை வீழ்ச்சி அடைந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும். இந்த நிலையில் தான், சொத்துக்களில் பிரித்து முதலீடு செய்யும்போது ஒரு சொந்தின் நஷ்டத்தை மற்றொரு லாபத்தின் மூலம் ஈடு செய்துக்கொள்ளலாம்.
சந்தை ஏற்ற, இறக்கங்கள்
வெவ்வேறு சொத்து பிரிவுகள் சந்தை மாற்றங்களுக்கு வெவ்வேறு விதமாக எதிர்வினை பெறும். குறிப்பாக பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது தங்கம் அல்லது கடன் பத்திரங்களின் மதிப்பும் கனிசமாக உயரும்.
இதையும் படிங்க : புதிய கேஸ் இணைப்புகளை வழங்க மறுக்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. தேவைக்கு என்ன செய்யலாம்?
இலக்குகளை அடைதல்
முதலீட்டாளர்கள் தங்களது வயது, கால அவகாசம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு முதலீடு செய்ய இது உதவியாக இருக்கிறது.
ஒரே முதலீட்டில் முதலீடு செய்வது நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக தான் வெவ்வேறு முதலீடுகளில் பணத்தை பிரித்து பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.