AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புதிய கேஸ் இணைப்புகளை வழங்க மறுக்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. தேவைக்கு என்ன செய்யலாம்?

Why New LPG Connections Are Halted in India | ஈரான் போரால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் காரணமாக புதிய எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் தேவைகளை பூர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய கேஸ் இணைப்புகளை வழங்க மறுக்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. தேவைக்கு என்ன செய்யலாம்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Oct 2026 12:04 PM IST

கோடிக்கணககான இந்திய குடும்பங்களின் மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) உள்ளது. மனிதர்கள் வாழ உணவு முக்கியமாக உள்ள நிலையில், அதற்கு கேஸ் சிலிண்டர் அத்தியாவசியமானதாக உள்ளது. இவ்வாறு குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்ய இந்தியாவில் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இவை பொதுமக்களுக்கு தேவையான கேஸ் சிலிண்டர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன. ஆனால், இந்த நிறுவனங்கள் கடந்த 7 மாதங்களாக பொதுமக்களுக்கு புதிய இணைப்புகளை வழங்கமால் இருந்து வருகின்றன. இதற்கான காரணம் என்ன, இதற்கு ஏதேனும் மாற்று ஏற்பாடு உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போரால் ஏற்பட்டுள்ள எல்பிஜி தட்டுப்பாடு

இந்தியா தனது பெரும்பாலான எல்பிஜி தேவைகளை வளைகுடா நாடுகளிடம் இருந்துதான் பூர்த்தி செய்துக்கொள்கிறது. அவ்வாறு வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் எல்பிஜி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துதான் வரும். ஆனால், ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த 8 மாதங்களாக இந்தியாவில் எல்பிஜி தேவை தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேறு வழியின்றி இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து எல்பிஜி இறக்குமதியை செய்து வருகிறது.

இதையும் படிங்க : ஜனவரி மாதத்துக்கு தள்ளிப்போகிறதா எம்டிஆர்?.. வெளியான முக்கிய தகவல்.. காரணம் இதுதான்!

புதிய கேஸ் இணைப்புக்கு தடை விதித்த மத்திய அரசு

எல்பிஜி சப்ளையில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக மார்ச் மாதம் முதல் இந்தியாவில் மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சூழலில் தான் மத்திய அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தது. அதாவது, கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம், வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு பதிலாக வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை ஆகிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதுதான், புதிய கேஸ் இணைப்புகளை வழங்க தடையும் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: வெறும் ரூ.3,000க்கு ஓராண்டு முழுவதும் கட்டணமில்லாப் பயணம்

இந்த கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் முதலே நீக்கப்பட்டுவிட்டன. ஆனால், புதிய இணைப்புகள் மீதான தடை மட்டும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக பலரும் புதிய இணைப்புகளை வாங்க முடியாமல் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய கேஸ் இணைப்புகள் வழங்க தொடங்கும் வரை பொதுமக்கள் தங்களது கேஸ் சிலிண்டர் தேவைக்காக எண்ணெய் நிறுவனங்கள் Free Trade LPG – FTL திட்டத்தின் கீழ் வழங்கும் சிறிய ரக கேஸ் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us