AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜனவரி மாதத்துக்கு தள்ளிப்போகிறதா எம்டிஆர்?.. வெளியான முக்கிய தகவல்.. காரணம் இதுதான்!

UPI MDR Charge Postponed to Jan 2027 | இந்தியாவில் அக்டோபர் 15, 2026 அன்று எம்டிஆர் கட்டணம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், அது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, எம்டிஆர் கட்டணம் தள்ளிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதத்துக்கு தள்ளிப்போகிறதா எம்டிஆர்?.. வெளியான முக்கிய தகவல்.. காரணம் இதுதான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Oct 2026 14:58 PM IST

இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிகவும் பேசுபொருளாக உள்ளதுதான் எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டணம். இந்த கட்டணம், அக்டோபர 15, 2026 முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பலரும் யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனை முறையை கைவிட்டு, கையில் பணம் வைத்து செலவு செய்யும் முறைக்கு மாறினர். இந்த நிலையில் தான், மிக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, எம்டிஆர் கட்டணம் 2027 ஜனவரி மாதத்திற்கு தள்ளிப்போக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், எம்டிஆர் கட்டணம் குறித்த இந்த முக்கிய தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

எம்டிஆர் கட்டணம் என்றால் என்ன?

எம்டிஆர் கட்டணம் என்பது யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைக்கான கட்டணம் ஆகும். அதாவது, இந்த கட்டணம் மூலம் பொதுமக்களுக்கு எந்தவித சிக்கல்களும் ஏற்படாது. அவர்கள் வழக்கம் போல பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த கட்டணம் பெரிய வணிகர்களுக்கு தான் சிக்கலாக அமைந்துள்ளது. காரணம், பெரிய வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து யுபிஐ மூலம் பெறும் ரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இதுதான் எம்டிஆர் கட்டணம்.

இதையும் படிங்க : தீபாவளி ஷாப்பிங் முன்னோட்டம்.. அமேசான், பிளிப்கார்ட்டில் தள்ளுபடி தொடக்கம்.. என்ன எதிர்பார்க்கலாம்?

ஜனவரி 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் எம்டிஆர்?

இந்த எம்டிஆர் கட்டணம் அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜனவரி 01, 2026-க்கு ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், இறுதி முடிவுக்கு பிறகு விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : ரூ.35 முதல் 4 கோடி வரை சம்பளம்.. நானா படேகரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

எம்டிஆர் கட்டணம் தள்ளிப்போக காரணம் என்ன?

இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. தீபாவளி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசைக் கட்டி நின்றுக்கொண்டு இருக்கின்றன. வழக்கமாக பண்டிகை காலங்களின்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த எம்டிஆர் கட்டணத்தை அறிமுகம் செய்ய போதிய அவகாசம் இல்லாததை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us