AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold : ஆசைக்காட்டி மோசம் செய்த தங்கம்.. மூன்றே நாட்களில் ரூ.1,760 உயர்ந்தது!

Gold Price 1,760 Rupees Hike in 3 Days | தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து ஒரு கிராம் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தங்கம் விலை மீண்டும் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Oct 2026 22:26 PM IST
2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை. காரணம், சில மாதங்கள் சரிவை சந்தித்த தங்கம், சில மாதங்கள் தொடர் உயர்வை சந்தித்தது. இவ்வாறு தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் தொடர் உயர்வை சந்தித்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

1 / 5
அக்டோபர் மாதம் தொடங்கி இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது. இந்த மாதம் ஏதோ தங்கம் விலை குறைந்ததை போல தான் தோன்றியது. ஆனால், உண்மையில் சத்தமே இல்லாமல் தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, கடந்த மூன்று நாட்களாக தொடர் சரிவை சந்தித்த தங்கம் மீண்டும் வந்த இடத்திற்கே சென்றுள்ளது.

2 / 5
செப்டம்பர் மாதத்தில் ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், மாத கடைசியில் தங்கம் விலை படிப்படியாக சரிவை சந்தித்து ரூ.13,000-க்கு விற்பனையாகி வந்தது. தங்கம் விலை இதே நிலையில் நீடிக்குமா என்ற கனவில் சாமானிய மக்கள் இருந்த நிலையில் தான் வெறும் மூன்று நாட்களில் விலை தலைகீழாக மாறியுள்ளது.

3 / 5
அதாவது கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்வை சந்தித்துள்ளது. இதேபோல சவரனுக்கு ரூ.1,760 உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக இன்று ஒரு நாள் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை ஒரு கிராம் மீண்டும் ரூ.14,000-த்தை தாண்டும் சூழல் உருவாகியுள்ளது.

4 / 5
மறுபுறம் கடந்த சில நாட்களாக எந்தவித விலை மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில், வெள்ளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 8 நாட்களாக வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

5 / 5
Follow Us