AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

20 ஆண்டுகளில் ஓய்வை திட்டமிட்டுள்ளீர்களா?.. எவ்வளவு பணம் தேவைப்படும்?

Retirement Planning | ஓய்வு காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு பணம் முக்கியமாக உள்ளது. இந்த நிலையில், நீங்கள் இன்னும் 20 ஆண்டுகளில் பணி ஓய்வு பெற போகிறீர்கள் என்றால் உங்களுக்கு மொத்தம் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

20 ஆண்டுகளில் ஓய்வை திட்டமிட்டுள்ளீர்களா?.. எவ்வளவு பணம் தேவைப்படும்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Oct 2026 13:47 PM IST

வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டே இருக்கும் மனிதர்களுக்கு ஓய்வு தருவது இந்த பணி ஓய்வு தான். ஆனால், அந்த பணி ஓய்வு கூட பணம் இருந்தால் தான் இனிமையானதாக இருக்கும். இல்லை என்றால் கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும். எனவே தான் பணியின்போதே, பணி ஓய்வுக்கான நிதியை உருவாக்கி வைத்துக்கொள்வது அவசியமாக உள்ளது. இந்த நிலையில், இன்னும் 20 ஆண்டுகளில் நீங்கள் பணி ஓய்வு பெற உள்ளீர்கள் என்றால் உங்களது கையில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என்பது குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

பணவீக்கத்துக்கு ஏற்ப கணக்கிட வேண்டும்

வருங்கால நிதி தேவைகளை தற்போதைய சூழலை கொண்டு மதிப்பிடக்கூடாது. காரணம், பணவீக்கம். பணவீக்கத்தின் காரணமாக, பணத்தின் மதிப்பு குறைந்துக்கொண்டே போகும், ஆனால் பணத்தின் தேவை அதிகரித்துக்கொண்டே போகும். உதாரணமாக, இந்தியாவில் சராசரி பணவீக்க அளவு 6 சதவீதம் என வைத்துக்கொள்வோம். அப்படி இருக்க இப்போது ஒரு குடும்பத்தை சமாளிக்க மாதம் ரூ.50,000 தேவைப்பட்டால் அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.1.19 லட்சம் தேவைப்படும். இதுவே 20 ஆண்டுகளில் ரூ.1.60 லட்சமாக மாறும்.

இதையும் படிங்க : UPI மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி எப்போது?.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?

20 ஆண்டுகளில் ஓய்வு பெற்றால் எவ்வளவு பணம் வேண்டும்?

எனவே தான் ஒருவர் தனது ஓய்வு காலத்திற்கு நிதி திட்டமிடல் செய்யும்போது அதனை பணவீக்கத்தை கணக்கில் கொண்டு திட்டமிட வேண்டும். உதாரணமாக இன்னும் 20 ஆண்டுகளில் நீங்கள் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், நீங்கள் உங்கள் கையில் ரூ.6 கோடி பணத்தை வைத்திருக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் ஓய்வு பெறும்போது உங்களது கையில் ரூ.6 கோடி இருந்தால் தான் நீங்கள் தற்போது வாழும் தரத்தில் உங்களால் ஓய்வுக்கு பிறகும் வாழ முடியும்.

இதையும் படிங்க : வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: வெறும் ரூ.3,000க்கு ஓராண்டு முழுவதும் கட்டணமில்லாப் பயணம்

ஒருவர் தனது ஓய்வை திட்டமிட்டு 30 வயதிலேயே முதலீடு செய்ய தொடங்கினால் மிக சுலபமாக இருக்கும். காரணம், சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்து ஓய்வு கால நிதி இலக்கை அடைய முடியும். இதுவே, ஒருவர் தனது 40களில் ஓய்வு கால முதலீட்டை தொடங்கினால் அவர் சற்று அதிகமாக தொகையை முதலீடு செய்ய வேண்டும். எனவே, ஓய்வை திட்டமிட்டு இளமையில் முதலீடு செய்வது மிகவும் எளிமையானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us