AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : மூன்றாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று (அக்டோபர் 10, 2026) இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : மூன்றாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Oct 2026 10:38 AM IST

சென்னை, அக்டோபர் 10 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று (அக்டோபர் 10, 2026) மூன்றாவது நாளாக தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் சரிவுக்கு மத்தியில் உயர்ந்து வரும் தங்கம் விலை

2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை. காரணம், ஒரு மாதம் உயர்வை சந்திக்கும் தங்கம் அடுத்த மாதம் சரிகை சந்திக்கிறது. இவ்வாறு, மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை தான் தங்கம் கண்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், தற்போது மீண்டும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை மூன்றாவது நாளாக உயர்வை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : ஜனவரி மாதத்துக்கு தள்ளிப்போகிறதா எம்டிஆர்?.. வெளியான முக்கிய தகவல்.. காரணம் இதுதான்!

மூன்றாவது நாளாக உயர்ந்துள்ள தங்கம் விலை

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,880-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,142-க்கும், ஒரு சவரன் ரூ.1,21,136-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us