AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை மேம்பாடு – மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

பூந்தமல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து போரூர், வளசரவாக்கம் மற்றும் வடபழனி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வோருக்கு இந்த வழித்தடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக, பேருந்து மூலம் மெட்ரோ நிலையத்தை அடைந்து அங்கிருந்து நகரின் பிற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு இணைப்பு சேவைகள் உதவும்.

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை மேம்பாடு – மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Oct 2026 10:49 AM IST

அக்டோபர் 10, 2026: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், பூந்தமல்லி பைபாஸ் – போரூர் சந்திப்பு – வடபழனி வழித்தடத்தில் பயணிகளுக்கான இணைப்பு பேருந்து சேவைகளை மேம்படுத்த மாநகரப் போக்குவரத்துக் கழகமும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதுதொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயில் நிலையங்களையும் சென்னையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் வகையில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பயணிகள் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கு இடையே எளிதாக மாறிப் பயணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ‘ஆபாச பேச்சு!’.. கடன் வசூலிக்கச் சென்ற பஜாஜ் பைனான்ஸ் ஊழியர் கழுத்தறுத்துக் கொலை.. ராமநாதபுரத்தில் பயங்கரம்!!

11 மெட்ரோ நிலையங்கள் வழியாக இணைப்பு சேவை

பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி பேருந்து நிலையம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியகரம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி உள்ளிட்ட மெட்ரோ நிலையங்களை மையமாகக் கொண்டு இரு மார்க்கங்களிலும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிலையத்திலும் பயணிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் பேருந்து நிறுத்தங்களின் இருப்பிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தின் முக்கியத்துவம்

பூந்தமல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து போரூர், வளசரவாக்கம் மற்றும் வடபழனி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வோருக்கு இந்த வழித்தடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக, பேருந்து மூலம் மெட்ரோ நிலையத்தை அடைந்து அங்கிருந்து நகரின் பிற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு இணைப்பு சேவைகள் உதவும்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் பூந்தமல்லி – போரூர் – வடபழனி வழித்தடம், நகரின் மேற்குப் பகுதிகளுக்கான பொதுப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் இருந்து வடபழனி வரை மெட்ரோ சேவை பயன்பாட்டுக்கு வரும்போது, சாலைப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து பயணிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

மேலும் படிக்க: இடைத்தேர்தல் முடிவுகள்.. அதிமுக வாக்குகளை சுருட்டிய தவெக.. தனி பாதையில் தடம் பதிக்கும் திமுக!!

கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆய்வு

பயணிகளிடமிருந்து பெறப்படும் கருத்துகள் மற்றும் பயணத் தேவைகளின் அடிப்படையில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும். மேலும், ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலும் பேருந்து சேவைகளை எளிதாக அணுகும் வகையில் தனிப்பட்ட பேருந்து நிறுத்தங்களை அமைப்பதற்கான தேவைகளும் ஆராயப்படும்.

மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்து சேவைகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தி, சென்னையில் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதே இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us