AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

‘ஆபாச பேச்சு!’.. கடன் வசூலிக்கச் சென்ற பஜாஜ் பைனான்ஸ் ஊழியர் கழுத்தறுத்துக் கொலை.. ராமநாதபுரத்தில் பயங்கரம்!!

Bajaj Finance Employee Murdered: ராமநாதபுரம் அருகே கடன் வசூலிக்கச் சென்ற பஜாஜ் பைனான்ஸ் ஊழியர் பிரேம்குமார் கழுத்த அறுத்துக் கொலை செய்யப்பட்டு பனைந்தோட்டப் பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகாத முறையில் பேசியதால் ஆத்திரத்தில் கொன்றதாகக் கூறிய காளிதாஸை போலீசார் கைது செய்துள்ளனர்.

‘ஆபாச பேச்சு!’.. கடன் வசூலிக்கச் சென்ற பஜாஜ் பைனான்ஸ் ஊழியர் கழுத்தறுத்துக் கொலை.. ராமநாதபுரத்தில் பயங்கரம்!!
விசாரணையில் போலீஸ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Oct 2026 10:05 AM IST

ராமநாதபுரம், அக்.10: ராமநாதபுரம் மாவட்டம் வாளந்தராவை பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், பிரபல தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸில் கடன் தவணை தொகையை வசூல் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தார். கடந்த 5-ஆம் தேதி வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் காலை வேலைக்குச் சென்ற அவர் திடீரென மாயமானார். அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் குடும்பத்தினரும் நிறுவனத்தினரும் அவரைத் தேடிய நிலையில், வாளந்தராவை விளக்கு ரோடு பகுதியில் அவரது இருசக்கர வாகனம் மட்டும் தனியாகக் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் துணையுடன் துத்திவலசையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரிடம் மேற்கொண்ட அதிரடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இதையும் படிக்க: நள்ளிரவில் Boy Friend உடன் பேசிய மாணவி.. திடீரென நகை பறித்து சென்ற கும்பல்.. நெல்லையில் பகீர் சம்பவம்!

கடன் தவணை தொகையும் கொடூரக் கொலையும்:

சம்பவத்தன்று பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை வசூலிப்பதற்காக பிரேம்குமார் துத்திவலசை பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு தோப்புவலசை பணங்காட்டுப் பகுதியில் கள்ளு குடித்துக் கொண்டிருந்த காளிதாஸ், பணத்தை அங்கேயே வந்து பெற்றுக்கொள்ளுமாறு பிரேம்குமாரை வரவழைத்துள்ளார். அங்கு சென்ற பிரேம்குமார் பணம் கேட்டு நின்றபோது, பனைமரத்தின் அடியில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காளிதாஸ் அவரின் பின் கழுத்திலும், பின்னர் முன்கழுத்திலும் ஆழமாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிரேம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பின்னர், உடலை யாருக்கும் தெரியாமல் மறைப்பதற்காக பனைமரத்தின் காய்ந்த ஓலைகளைப் போட்டு மூடிய காளிதாஸ், அருகே தனது தம்பி வீட்டுக் கட்டிட வேலைக்கு வைக்கப்பட்டிருந்த மண்வெட்டியைக் கொண்டு வந்து இரண்டரை அடி ஆழம் குழிதோண்டி உடலைப் புதைத்துள்ளார்.

செல்போன் வீச்சு மற்றும் நகை திருட்டு:

கொலையைச் செய்தபின் அடையாளத்தை மறைக்க முயன்ற காளிதாஸ், பிரேம்குமாரின் இருசக்கர வாகனத்தை வாளந்தராவை விளக்கு ரோடு பகுதியில் கொண்டு வந்து விட்டுள்ளார். அதன்பிறகு, பிரேம்குமாரின் இரண்டு செல்போன்களையும் சாலை விரிவாக்கப் பணிக்காகத் தோண்டப்பட்டிருந்த தண்ணீர் குழிக்குள் வீசிவிட்டு, அங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் தனது வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளார். இருப்பினும், கொலையை மறைக்க முயன்றாலும், பிரேம்குமாரின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை உச்சிப்புளியில் உள்ள ஒரு அடகு கடையில் காளிதாஸ் அடகு வைத்திருந்தது போலீசாருக்கு முக்கிய துப்பாக அமைந்தது. அந்த அடகு கடையில் இருந்து தங்க நகையை மீட்ட போலீசார், காளிதாஸ் அடையாளம் காட்டிய பணங்காட்டுப் பகுதிக்கு வருவாய்த் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் சென்று புதைக்கப்பட்ட பிரேம்குமாரின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க: காதல் மனைவி அளித்த பரபரப்பு புகார்.. பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் திடீர் கைது.. காவல்துறையில் பரபரப்பு!

கொலைக்கான பின்னணி, பொதுமக்களின் போராட்டம்:

காவல்துறையினரின் விசாரணையில், கடன் தவணை கட்ட தாமதமானதால் காளிதாஸின் வீட்டிற்குச் சென்று பணம் கேட்ட பிரேம்குமார், தன்னைப் பற்றியும் தனது மகளைப் பற்றியும் ஆபாசமாகவும் தவறாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்தே தான் பிரேம்குமாரைக் கொன்றதாகக் காளிதாஸ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, தினமும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று நல்ல உடல் வலிமையுடன் இருக்கும் பிரேம்குமாரை ஒரு நபர் மட்டும் தனியாகக் கொலை செய்திருக்க முடியாது என்றும், இதில் மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்ட இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us