AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இடைத்தேர்தல் முடிவுகள்.. அதிமுக வாக்குகளை சுருட்டிய தவெக.. தனி பாதையில் தடம் பதிக்கும் திமுக!!

Tamilnadu By Election Results 2026: தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான தவெக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், அதிமுகவின் வாக்குகள் அனைத்தும் தவெக பக்கம் சென்றதால் அதிமுக பெரும் சரிவைச் சந்தித்துள்ளது

இடைத்தேர்தல் முடிவுகள்.. அதிமுக வாக்குகளை சுருட்டிய தவெக.. தனி பாதையில் தடம் பதிக்கும் திமுக!!
மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய், இபிஎஸ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Oct 2026 08:41 AM IST

அக்டோபர், 10: தமிழக அரசியல் பரப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பல முக்கியக் கட்சிகள் தவெக பக்கம் சாய்ந்த போதிலும், எந்தவிதப் பெரிய கூட்டணி பலமும் இல்லாமல் திமுக தன் வசமிருந்த வாக்கு வங்கியைத் திறம்படத் தக்கவைத்துக் கொண்டிருப்பது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேசமயம், கடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பலம் காட்டிய எதிர்க்கட்சியான அதிமுக, இந்த இடைத்தேர்தலில் கடும் சரிவைச் சந்தித்து தனது பல தொகுதிகளில் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி சரிந்து, அந்த வாக்குகள் அனைத்தும் தவெக பக்கம் சென்றுள்ளது தமிழக அரசியலில் புதிய விவாதங்களையும் கணக்குகளையும் உருவாக்கியுள்ளது.

இதையும் படிக்க: சவால்களை எதிர்கொண்டு மதுராந்தகத்தில் கொடிகட்டிய தவெக.. மரகதம் குமரவேல் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!!

மதுராந்தகம்: பலம் குன்றாக் களம்:

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், திமுக கூட்டணி பலத்துடன் போட்டியிட்டு 30.18 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் விலகிய போதிலும், திமுக கிட்டத்தட்ட அதே அளவிலான 31.78 சதவீத வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கியைத் துளிக்கூட குறையாமல் தக்கவைத்துக் காட்டியுள்ளது. மறுபுறம், மதுராந்தகத்தில் கடந்த பொதுத்தேர்தலில் 34.95 சதவீதமாக இருந்த அதிமுகவின் வாக்கு வங்கி, இந்த இடைத்தேர்தலில் 25.39 சதவீதமாகக் குறைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், தவெகவின் வாக்கு சதவீதம் 31.32 சதவீதத்திலிருந்து 40.17 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாராபுரம்: அதிமுகவின் கோட்டையில் சரிவு:

திருப்பூர் மாவட்டத்தின் மேற்கு மண்டலப் பகுதியான தாராபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளன. கடந்த பொதுத்தேர்தலில் 40.56 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் இருந்த அதிமுக, தற்போது வெறும் 25.08 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மாறாக, தாராபுரத்தில் கடந்த முறை 32.20 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த திமுக, இடைத்தேர்தலிலும் 31.78 சதவீத வாக்குகளைப் பெற்று தனது பலத்தை ஆழமாகப் பதிவு செய்துள்ளது. இதில் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், முதலமைச்சர் விஜய் நேரில் சென்று முருங்கைக்காய் பறித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட மூலனூர் ஒன்றியப் பகுதியில், தவெகவை விட திமுக அதிகமான வாக்குகளைப் பெற்று தனது செல்வாக்கை அசைக்க முடியாது நிரூபித்துள்ளது. தாராபுரத்திலும் தவெகவின் வாக்கு வங்கி 23.23 சதவீதத்திலிருந்து 37.02 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: “தைரியமா இரு மா..” – தாராபுரம் திமுக வேட்பாளருக்கு ஆறுதல் சொன்ன மு.க.ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளும் புதிய அரசியல் யூகங்களும்:

இந்த இடைத்தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்தமாக ஆராயும்போது, இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக தன் வசமிருந்த வாக்குகளை முழுமையாகப் பறிகொடுத்துள்ளதும், அந்த வாக்குககள் யாவும் தவெக பக்கமே முழுமையாக இடம் பெயர்ந்துள்ளதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணி மாற்றங்கள் மற்றும் புதிய கட்சிகளின் எழுச்சிக்கு மத்தியில், ஆளுங்கட்சியான திமுக தனது அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவுடனும் வாக்கு வங்கியுடனும் ஸ்திரத்தன்மையைக் காட்டியுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் எதிர்வரும் அரசியல் நகர்வுகளுக்கும், கட்சிகளின் உத்திகளை மாற்றியமைப்பதற்கும் ஒரு மிக முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Follow Us