AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather forecast: நாளை 12 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather today : கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 10, 2026 இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather forecast: நாளை 12 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Oct 2026 14:46 PM IST

சென்னை, அக்டோபர் 10: கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 10, 2026 இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 16, 2026 அன்று வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

நாளை 12 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல், சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இந்தச் சுழற்சியிலிருந்து உள் தமிழகம், உள் கர்நாடகா வழியாக வடக்கு மத்திய மகாராஷ்டிரா வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நீடிக்கிறது. இதன் காரணமாக அக்டோபர் 16, 2026 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : யாருக்கு பயந்து இளைஞர்கள் போராட்டத்தை நசுக்குகிறீர்கள்?.. முதல்வர் விஜய்க்கு உதயநிதி சரமாரி கேள்வி!

இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 10, 2026 இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும் என்றும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுவை, காரைக்காலிலும் லேசான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 11, 2026 நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற இடங்களில் லேசான மழைக்கே வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 12, 2026 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் . அக்டோர் 13, 2026 அன்று மழை மேலும் குறைந்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர்.. கட்டப்பஞ்சாயத்து செய்தவருக்கு வந்த சோதனை.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை!

அக்டோபர் 14, 2026 தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அக்டோபர் 15, 2026 அன்று தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 16, 2026 அன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுடன், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களான கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Follow Us