AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ramayana: ராம யுகத்தின் ஆரம்பம்… ரன்பீர் – சாய் பல்லவியின் ராமாயணா பார்ட் : 1 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Ramayana Part 1 Movie: 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு மாபெரும் மற்றும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ராமாயணா பார்ட் : 1. இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

Ramayana: ராம யுகத்தின் ஆரம்பம்… ரன்பீர் – சாய் பல்லவியின் ராமாயணா பார்ட் : 1 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ராமாயணா பார்ட் : 1 Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Oct 2026 18:04 PM IST

பாலிவுட் சினிமாவில் மாபெரும் படைப்பாக உருவாக்கப்பட்டுள்ள புத்தம் புதிய சகாப்தம்தான் ராமாயணா பார்ட் 1 (Ramayana Part 1). இந்த படத்தை பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari) இயக்கியுள்ள நிலையில், தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா (Namit Malhotra) தயாரித்துள்ளார். இந்த படமானது இந்துக்களின் புராண கதையான ராமாயணத்தின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மிகவும் பிரம்மாண்டமான திரைப்படமாகும். இந்த படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) ஸ்ரீ ராமராக நடித்திருக்கும் நிலையில், தமிழ் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) தேவி சீதையாக நடித்துள்ளார். இந்த படமானது ஹாலிவுட் பட ரேஞ்சில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR. Rahman) மற்றும் ஹாலிவுட் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் (Hans Zimmer) இணைந்து இசையமைத்துள்ளார்.

இந்த ராமாயணா திரைப்படமானது 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ராமாயணா பார்ட் 1, 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என கடந்த 2025ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் 2 பட FDFS எப்போது தெரியுமா?

சாய் பல்லவி மற்றும் ரன்பீர் கபூரின் ராமாயணா பார்ட் 1 படத்தின் ரிலீஸ் தேதி:

இந்த ராமாயணா பார்ட் 1 படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி மிக பிரம்மாண்டமாக இயக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த விதத்தில் இந்த சகாப்தமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறதாம். தீபாவளியை முன்னிட்டு இந்த படமானது உலகமெங்கும் வெளியாகும் நிலையில், நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமாயணா பார்ட் 1 திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:

இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சாய் பல்லவி சீதையாக நடித்துள்ள நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கன்னட நடிகர் யாஷ் இதில் ராவணனாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: டோரதி பட ஹிட்… சனந்த் மற்றும் ரிஷிகாந்த்துக்கு வாழ்த்து மடலை அனுப்பிய சியான் விக்ரம்!

அந்த விதத்தில் இப்படமானது பிக் ஸ்டார்களின் படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us