AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35க்கு வெங்காயம்: தமிழக அரசின் முக்கிய நடவடிக்கை

Tamil Nadu Ration Shops to Sell Onions : வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் 3வது கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.35 என்ற விலையில் வெங்காய விற்பனை தொடங்கியுள்ளது. ஒரு ரேஷன் கார்டு மூலம் 1 கிலோ வரை வெங்காயம் வாங்க முடியும்.

ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35க்கு வெங்காயம்: தமிழக அரசின் முக்கிய நடவடிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Oct 2026 17:11 PM IST

சென்னை, அக்டோபர் 11: வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் 3வது கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.35 என்ற விலையில் வெங்காய விற்பனை தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த அக்டோபர் 10, 2026 நேற்று முதலும், பிற மாவட்டங்களில் அக்டோபர் 11, 2026 இன்று முதலும் குடும்ப அட்டைதாரர்கள் வெங்காயம் வாங்கலாம் என கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் துறை தெரிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35க்கு வெங்காயம்

தமிழக வீடுகளில் சமையலில் தவிர்க்க முடியாத வெங்காயத்தின் விலை அண்மைக்காலமாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கவும், நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, அரசே வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

இதையும் படிக்க : “குறைந்தபட்ச கட்டணம் ரூ.10”.. பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம், முக்கிய விவரங்கள் இதோ!!

முதல் கட்டமாக, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடமிருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் கட்டத்தில், நாஃபெட் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் ஆகிய இரு அமைப்புகளிடமிருந்தும் வெங்காயம் பெறப்பட்டது. பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பு மற்றும் தொடர்ந்து நிலவும் தேவையைக் கருத்தில் கொண்டு, தற்போது மூன்றாம் கட்டமாக என்சிசிஎஃப் அமைப்பிடமிருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவை பல்வேறு போக்குவரத்து வசதிகள் மூலம் மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 8,914 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் இந்த விற்பனை நடைபெறுகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதி நியாய விலைக் கடைக்குச் சென்று வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு வெங்காயம் தொடர்ந்து நியாயமான விலையில் கிடைப்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும் என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : “திமுக – அதிமுக ரகசிய கூட்டு!”.. விளாசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திடுக் குற்றச்சாட்டு!!

நியாய விலைக் கடைகளில் வெங்காய விற்பனை தொடர்பான புகார்கள் அல்லது குறைகள் இருந்தால், பொதுமக்கள் 96005 61969 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் துறை அறிவித்துள்ளது. வெங்காய விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் ரேசன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35 என்ற விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் எளிய குடும்பங்கள் மிகவும் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us