AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

GNWL, RLWL, PQWL, TQWL: ரயில் பயணம் செய்பவரா நீங்கள்?.. எந்த வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் சீக்கிரம் உறுதியாகும் தெரியுமா?

GNWL vs RLWL vs PQWL vs TQWL: இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது GNWL, RLWL, PQWL மற்றும் TQWL வெயிட்டிங் லிஸ்ட்களில் எதற்கு உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்? ரயில்வே துறை அதிகாரிகள் விளக்கும் முக்கிய விவரங்கள் மற்றும் டிக்கெட் கன்ஃபர்மேஷன் முன்னுரிமை பற்றிய முழுத் தகவல்கள்.

GNWL, RLWL, PQWL, TQWL: ரயில் பயணம் செய்பவரா நீங்கள்?.. எந்த வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் சீக்கிரம் உறுதியாகும் தெரியுமா?
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Oct 2026 13:56 PM IST

அக்டோபர், 12: இந்தியாவில் ரயில் பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்யும் பெரும்பாலானோரை கவலைப்பட வைக்கும் விஷயம் வெயிட்டிங் லிஸ்ட் (Waiting List) ஆகும். ஒரே எண்ணைக் கொண்ட காத்திருப்புப் பட்டியல் டிக்கெட் வைத்திருந்தாலும், இரு பயணிகளுக்கு டிக்கெட் உறுதி ஆவதற்கான வாய்ப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதற்கு முக்கியக் காரணம், அந்த டிக்கெட் எந்தப் பிரிவின் கீழ் (GNWL, RLWL, PQWL/TQWL) ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுதான். ரயில்வே விதிகளின்படி இவை அனைத்தும் வெயிட்டிங் லிஸ்ட்டின் வெவ்வேறு வடிவங்கள் மட்டுமல்ல; அவை வெவ்வேறு ஒதுக்கீட்டுப் பிரிவுகளைக் குறிக்கின்றன. எனவே, எந்த வகையான காத்திருப்புப் பட்டியல் விரைவாக உறுதியாகும் என்பதைப் புரிந்துகொள்வது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிக்க: டெல்லி – சென்னை விமானத்தில் பவர் பேங்க்கால் தீ விபத்து – பரபரப்பு தகவல்

பொதுவான காத்திருப்புப் பட்டியல் (GNWL):

ரயில்வே துறையில் பொதுவாகக் காணப்படக்கூடிய வெயிட்டிங் லிஸ்ட் வகைகளில் ‘GNWL’ எனப்படும் ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட் (General Waiting List) மிகவும் வலிமையான நிலையாகக் கருதப்படுகிறது. இது பொது ஒதுக்கீட்டின் (General Quota) கீழ் வருவதால், பயண ரத்து மற்றும் பயன்படுத்தப்படாத ஒதுக்கீடுகள் மூலம் இதுவே முதன்மையாக நகர்ந்து உறுதி செய்யப்படுகிறது. ரயில்வே விதிகளின்படியும், RLWL மற்றும் PQWL போன்ற சிறிய ஒதுக்கீடுகள் அனைத்தும் GNWL வரிசைக்குப் பின்னர்தான் பரிசீலிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, மற்ற பிரிவுகளைக் காட்டிலும் GNWL பிரிவில் உள்ள டிக்கெட்டுகள் உறுதியாவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகமாக இருக்கின்றன.

இடைப்பட்ட நிலையங்களின் ஒதுக்கீடுகள் (RLWL & PQWL):

ரயிலின் தொடக்க நிலையத்தில் இருந்து அல்லாமல், வழியில் உள்ள முக்கிய அல்லது தொலைதூர இடைப்பட்ட நிலையங்களில் (Remote Stations) இருந்து பயணம் செய்யப் பதிவு செய்யும் போது ‘RLWL’ (Remote Location Waiting List) ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்குச் சிறிய அளவிலான இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்படுவதால், அந்த குறிப்பிட்ட நிலையத்தின் ரத்துகளுக்குப் பிறகே இது உறுதியாகும். இதேபோல், இரு குறிப்பிட்ட இடைப்பட்ட நிலையங்களுக்கு இடையேயான பயணிகளுக்காகப் பகிரப்படும் ‘PQWL’ (Pooled Quota Waiting List) முறையும் இடங்களைக் கொண்டது. இவை இரண்டும் GNWL வரிசைக்குப் பின்னர்தான் கிளியர் செய்யப்படும் என்பதால், ஒரே எண்ணாக இருந்தாலும் GNWL-ஐ விட இந்த வரிசைகளின் நகர்வு மெதுவாகவே இருக்கும்.

தட்கல் காத்திருப்புப் பட்டியல் (TQWL):

தட்கல் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள் முழுமையாக நிரம்பிய பிறகு வழங்கப்படும் காத்திருப்புப் பட்டியல் ‘TQWL’ (Tatkal Quota Waiting List) என அழைக்கப்படுகிறது. இது கடைசி நேரப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்காக உருவாக்கப்பட்டது. இதன் உறுதிப்படுத்தும் முறை மற்ற பொதுவான பிரிவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தட்கல் பிரிவில் ரத்தாகும் டிக்ககட்டுகள் மற்றும் கிடைக்கும் காலியிடங்களைப் பொறுத்தே TQWL டிக்கெட்டுகள் உறுதியாகும். எனவே, சிறிய எண் வரிசையில் இருந்தாலும் இதனை நேரடியாக GNWL உடன் ஒப்பிட முடியாது என்று ரயில்வே அதிகாரிகள் தெளிவுபடுத்துகின்றனர்.

இதையும் படிக்க : வேலை மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றனவா? கல்வித் தகுதிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த உண்மைகள் என்ன?

பிற காரணிகளும் AI கணிப்புகளும்:

வெயிட்டிங் லிஸ்ட் எண்ணை மட்டும் வைத்து இறுதி முடிவுக்கு வந்துவிட முடியாது என ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். உதாரணமாக, GNWL 120 என்ற பெரிய எண்ணை விட RLWL 2 என்ற சிறிய எண் பாதுகாப்பானது என்று கூறிவிட முடியாது; ஏனெனில் இது ரயில், வகுப்பு, பயணம் செய்யும் நாள், பருவகாலம் மற்றும் ரத்து செய்யப்படும் முறைகளைப் பொறுத்து மாறுபடும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின்படி, இந்திய ரயில்வேயின் ‘RailOne’ செயலி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிக்கெட் உறுதியாகும் வாய்ப்பை முன்பை விட 94 சதவீதம் துல்லியமாகக் கணக்கிட்டுக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us