AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

BREAKING: அதிமுகவுக்கு தொடர் சறுக்கல்… எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா.. காரணம் இதோ!

AIADMK MLA Esakki Subbaiah Resigns: அதிமுகவில் அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ-வான இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஏற்கெனவே, 3 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4- ஆக உயர்ந்துள்ளது.

BREAKING: அதிமுகவுக்கு தொடர் சறுக்கல்… எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா.. காரணம் இதோ!
இசக்கி சுப்பையா எம்எல்ஏ பதவி ராஜினாமா
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 26 May 2026 12:35 PM IST

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில், எடப்பாடி பழனிசாமிக்கு 22 எம்எல்ஏக்களும், சி.வி. சண்முகம் தலைமையிலான அணியில் 25 எம்எல்ஏக்களும் இருந்தனர். இந்த நிலையில், சி.வி. சண்முகம் தலைமையிலான அணியில் இருந்து மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகிய 3 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியே ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகரிடம் அளித்திருந்தனர். இந்த நிலையில், சி.வி சண்முகம் தரப்பை சேர்ந்த மற்றொரு எம்எல்ஏவான இசக்கி சுப்பையா தனது பதவியே ராஜினாமா செய்துள்ளார்.

சபாநாயகரிடம் இசக்கி சுப்பையா கடிதம் அளித்தார்

இதற்கான கடிதத்தை இன்று செவ்வாய்க்கிழமை ( மே 26- ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகரிடம் வழங்கினார். அப்போது, சபாநாயகர் கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி தர வேண்டும் என்று இசக்கி சுப்பையா விடம் வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் சபாநாயகர் முன்னிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏவான இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி சபாநாயகரிடம் அளித்தார்.

மேலும் படிக்க: 4 தொகுதிகள் காலி.. அடுத்து என்ன நடக்கும்? தவெகவுக்கு இது மேலும் பலமா?

அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா

ஏற்கெனவே அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்து உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 4- ஆக உயர்ந்துள்ளது. இதில், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இதே போல இசக்கி சுப்பையாவும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.

ராஜினா காரணத்தை விளக்கிய இசக்கி சுப்பையா

மேலும், ஏற்கனவே ராஜினாமா செய்த மூன்று எம்எல்ஏக்களின் தொகுதிகள் காலியானதாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, ராஜினாமா செய்த இசக்கி சுப்பையாவின் அம்பாசமுத்திரம் தொகுதியும் காலியானதாக விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என தெரிகிறது. இசக்கி சுப்பையா கைப்பட எழுதிய கடிதத்தில் தனது குடும்ப சூழல் காரணமாகவும், எனது தொகுதி மக்கள் நலனுக்காகவும், கடந்த 5 ஆண்டு காலமாக எனது தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத காரணத்தால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்.

மேலும் படிக்க: விவசாய கடன் தள்ளுபடி.. தில்லுமுல்லு வேலை; திசைத்திருப்பவே இந்த அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி சாடல்..

Follow Us