AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்… பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பு!

CM Joseph Vijay To Meet PM Modi: தமிழகத்தின் முதல் அமைச்சர ஜோசப் விஜய் நாளை ( புதன்கிழமை) டெல்லி செல்ல உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்… பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பு!
முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 26 May 2026 13:04 PM IST

தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் கடந்த மே 10- ஆம் தேதி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களான திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எஸ். பி. வேலுமணி, சி. வி. சண்முகம் ஆகியோரை முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்து இருந்தார். இதே போல, தேசிய கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரையும் சந்திப்பதாக தெரிவித்து இருந்தார்.

முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நாளை புதன்கிழமை ( மே 27) டெல்லி செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அங்கு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து தமிழகத்துக்கான நிதி, கோரிக்கைகள் மற்றும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக விஜய் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பக்ரீத் – வார இறுதி நாள்.. மக்களே சொந்த ஊர் போறீங்களா? இன்று முதல் 4,195 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

காங்கிரஸ் தலைவர்களுடன் விஜய் சந்திப்பு

இதைத் தொடர்ந்து, அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்றொரு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் உள்ளிட்டோரை முதல்வர் விஜய் சந்திக்க இருப்பதாகவும் தெரிகிறது. அத்துடன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் முதல்வர் விஜய் திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டெல்லியில் முதல்வரை வரவேற்க சிறப்பு ஏற்பாடு

ஏற்கனவே, இரு முறை முதல்வர் விஜய் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், முதல்வர் விஜய் டெல்லி செல்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நாளை முதல்வர் டெல்லி செல்வது உறுதியாகி உள்ளது. இதனிடையே, டெல்லியில் முதல்வர் விஜயை வரவேற்பதற்காகவும், தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய் தங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேவையான வசதிகளை செய்வதற்காகவும் தமிழக அரசு துறை அதிகாரிகள் ஏற்கனவே கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘நியாயப்படுத்த முடியாது.. குதிரபேர அரசியல் செய்யும் தவெக’.. காங்கிரஸ் கட்சி ஜோதிமணி கண்டனம்

Follow Us