AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்..

“சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா இன்று மாலை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு ராஜரத்தினம் மைதானத்தில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அதிரடிப்படையின் ரோந்து பணிகளுக்காக 30 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்புகளுக்கு உடனடி பதிலளிக்கும் வகையில் அதிநவீன தகவல் தொடர்பு வசதிகளும் இந்தப் படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 May 2026 07:04 AM IST

மே 27, 2026: தமிழகத்தின் பெண்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படையை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பெண்கள் அச்சமின்றி வாழக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கிலும் இந்த புதிய சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை:

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே பெண்களின் பாதுகாப்பு அரசின் முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என அறிவித்திருந்தார். அதன்படி, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கவும், அவசர சூழல்களில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க: “டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்ப அழைப்பு”.. ஜூன் மாத இறுதிக்குள் மாற்றம்.. அமைச்சர் கொடுத்த உறுதி!!

இந்தப் படையின் முதல் பெண் ஐஜியாக பவானிஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள அதிகாரியான அவர், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தவர் என கூறப்படுகிறது. இந்தப் படையில் ஒரு காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த சிறப்பு படைக்கு “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” என்ற பெயரை ஐஜி பவானிஸ்வரிதான் பரிந்துரை செய்ததாகவும், அதனை முதலமைச்சர் உடனடியாக ஏற்றுக்கொண்டு அதிகாரப்பூர்வமாக அந்த பெயரை அறிவித்ததுடன், அவரையே இந்தப் படையின் தலைவராகவும் நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்:

இந்த “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா இன்று மாலை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு ராஜரத்தினம் மைதானத்தில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அதிரடிப்படையின் ரோந்து பணிகளுக்காக 30 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்புகளுக்கு உடனடி பதிலளிக்கும் வகையில் அதிநவீன தகவல் தொடர்பு வசதிகளும் இந்தப் படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்ற உள்ளார். மேலும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் அறிவிப்புகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஜிபி சந்திப் ராய் ரத்தோர், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் சூழலில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாநில அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Follow Us