AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்ப அழைப்பு”.. ஜூன் மாத இறுதிக்குள் மாற்றம்.. அமைச்சர் கொடுத்த உறுதி!!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே மாதம் 2022-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டு படிப்படியாகத் தற்போது சென்னை, நெல்லை, விருதுநகர் நீங்கலாக தமிழ்நாட்டின் பிற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

“டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்ப அழைப்பு”.. ஜூன் மாத இறுதிக்குள் மாற்றம்.. அமைச்சர் கொடுத்த உறுதி!!
டாஸ்மாக் கடை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 May 2026 06:41 AM IST

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளள டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்புமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அழைப்பு விடுத்துள்ளார். பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தும் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், காலி மது பாட்டில்களை கையாளுவதில் தற்போது நடைமுறையில் உள்ள சிக்கலான மற்றும் சிரமமான வழிமுறைகளைத் தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்… பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பு!

பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே மாதம் 2022-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டு படிப்படியாகத் தற்போது சென்னை, நெல்லை, விருதுநகர் நீங்கலாக தமிழ்நாட்டின் பிற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தினால் தங்களுக்குக் கடுமையான பணிச்சுமை ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது, வாடிக்கையாளர்கள் திரும்பக் கொடுக்கும் ஸ்டிக்கர்களைச் சரிபார்ப்பது, பணத்தைக் கணக்கிட்டுத் திரும்பக் கொடுப்பது போன்ற பணிகளைச் செய்யக் கடைகளில் போதிய ஆட்கள் இல்லை என்றும், கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

டாஸ்மாக் கடைகள் மூடல்:

இதற்கிடையே பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை வெளிமுகமை வழியாகத் திரும்பப்பெற வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்னிறுத்தி ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. மேலும், நிர்வாகம் உடனடியாக ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை மாவட்டத்தில் உள்ள எந்தவொரு டாஸ்மாக் கடையையும் திறக்க மாட்டோம் என்றும் ஊழியர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

விரைவில் புதிய திட்டம்:

இந்நிலையில், அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பில், டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைக்கு இணங்க வெளிமுகமையின் வழியாக காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை உடனடியாக உருவாக்க உயர்நீதிமன்றத்தில் உறுதிப்பத்திரம் அளித்து வரும் ஜூன் மாத இறுதிக்குள் பணியாளர்களின் கோரிக்கையை முழுதும் நிறைவேற்றும் வண்ணம் அவர்கள் பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை கையாளும் தற்போதைய நடைமுறையை முழுமையாக தவிர்க்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

பணிக்கு திரும்ப வலியுறுத்தல்:

வெளி முகமை வழியாக காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, பணியாளர்கள் அனைவரும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து பணியாளர் நலன் காக்க நிர்வாகம் முன்னெடுத்திருக்கும் இத்திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு இன்று முதல் வழக்கம் போல பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க: பக்ரீத் – வார இறுதி நாள்.. மக்களே சொந்த ஊர் போறீங்களா? இன்று முதல் 4,195 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அதோடு, டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், எனவே ஊழியர்கள் எவ்வித தொய்வும் இன்றி தங்களது பணிகளைத் தொடர வேண்டும் என்றும் அமைச்சர் விக்னேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow Us