AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி – வெளியான அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இன்னும் ஓரிரு மாதங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி – வெளியான அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Jun 2026 15:57 PM IST

சென்னை, ஜூன் 6 : தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் இன்னும் ஓரிரு மாதங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்டவுள்ளது. அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தலின்படி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் தலைமையில் ஆய்வு செய்து அனைத்து கோவில்களிலும் அமல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இனி கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடந்த மே 29, 2026 அன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அமைச்சர் என தெரியாமல் சிறப்பு தரிசனத்துக்காக கூடுதல் கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அர்ச்சகருக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கூடுதல் பணம் பெற்ற காவலாளி மற்றும் முடிதிருத்தும் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க : “ஒரு நல்ல படம் கூட தராதவர், நல்ல ஆட்சி தருவாரா?” முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றிய ஐயப்பன் என்பவர் விஐபி தரிசனத்திற்கு அமைச்சரிடமே ரூ. 4000 கேட்டுள்ளார். இதனையடுத்து அமைச்சர் தரப்பில் யுபிஐ மூலம் அர்ர்ச்சகருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னரே வந்திருப்பவர் அர்ச்சகர் என அமைச்சருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அர்ச்சகரிடம் அமைச்சர் ரமேஷ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : “திமுககாரனை உங்களால் அசைக்கவே முடியாது”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு மேயர் பிரியா அதிரடி பதிலடி!

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பல கோவில்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் பரவின. இதனை தடுக்கும் விதமாகவே தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இனி சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி என அமைச்சர் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவில்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவே இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும்போது எவ்வளவு பேர் சிறப்பு தரிசனத்திற்கு விண்ணப்பித்துள்ளார்கள், அதன் மூலம் எவ்வளவு வருமானம் வந்துள்ளது என்பதையும் இனி கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.

Follow Us